பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

|{{Xx-larger| இயல்-18'

பிரிவு வகைகள்


பா லை நிலத்தையும் பண்பட்ட இலக்கியப் பொருளாகச் செய்த சிறப்பு உலகிலேயே தமிழர்களிடையேதான் காணமுடியும் என்று கூறின் அது மிகையாகாது. பாலை நிலமே இல்லாத நாட்டில் வாழும் இவர்கள் பாலை நிலத்தில் வாழும் வாய்ப்புகள் பெறாவிடினும் கூட ஏனைய நிலப்பகுதிகளைப்பற்றிய இலக்கியங்களை விடப் பாலை நிலத்தைப்பற்றிய மிகச் சிறந்த இலக்கியங்களை உருவாக்கியுள்ளனர். பாலைநிலத்தைப்பற்றிப் பாட வேண்டிய வாய்ப்பு அறபுநாட்டருக்குத்தான் இயல்பாகவே உண்டு; அவர்கட்கு வாய்த்துள்ள இயற்கைச் சூழ்நிலைகளினால் பாலையைப் பாங்குறப் பாடியுள்ளனர். ஆனால், தமிழர்கள் அப்படியல்லர்: வேண்டுமென்றே பாலையைத் தேர்ந்தெடுத்து அதைப் பற்றிக் கவிதைகள் புனைந்துள்ளனர். மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்துவதற்கு இடையூறாகவுள்ள நிலைகளை யெல்லாம் உயர்ந்த கவிதைகளின் படைப்புக்குப் பொருளாகக் கொண்டுள்ளதை இங்குக் காணலாம். சங்கப் பாடல்களில் பாலைத் திணையைப்பற்றியே அதிகமான பாடல்கள் காணப்பெறுகின்றன. எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகிய அக நானுாற்றில் மட்டிலும் நானூறு பாடல்களில் இருநூறு பாடல்கள் பாலைத்திணையைச் சார்ந்தவை. இத்தகைய உயர்ந்த கவிதை களைப் புனைவதற்குக் கருவியாகவுள்ள பிரிதல் ஒழுக்கத்திற்கு காரணமாகக் காதலர்களின் வாழ்வில் நேரிடும் பிரிவுக் கட்டங் களைப்பற்றி ஒரளவு இவண் தெரிந்து கொள்வோம். இவை யாவும் கற்பொழுக்கத்தில் நிகழ்வனவாகும். இல்லறநெறியின் கீழ்க் குறிப்பிடப்பெற்ற ஐந்து கூறுகளில் இது ஐந்தாவது ஆகும்.<b

 பிரிவுவகைகள் :  களவு ஒழுக்கத்தில் இருக்கும்பொழுது ஒரு

நிமித்தத்திள் பொருட்டோ அல்லது ஒரு கருமத்தின் பொருட்டோ தலைவன் தலைவியை விட்டுப் பிரியும் வழக்கம் இல்லை. அவன்