பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுடையோர் 371 'இவளுடைய நோய் தணிதற்கு எனக்கு ஒரு வழிதெரியும். வீட்டிலே செறிக்கப்பெற்றிருப்பது நீங்கி அவள் அத்தலைவ னுடைய குன்றினைக் காண்பாளேயாயின், அவள் நோய் தணி தற்கு உரியது' என்கின்றாள் தோழி. இல்லத்தே வாழ்வார்க்குப் பிணி முதலியன வந்தெய்தியபொழுதெல்லாம் அந்நோய்க்குரிய காரணம் யாதென்று ஆய்ந்து அதற்கேற்பத் தீர்வு காண முயலாமல் எல்லாம் தெய்வக் குறையென்றேகொண்டு அத்துறுகல்மிசை ஆடு முதலியவற்றைப் பலி செய்தலாலே அக்கல் எப்பொழுதும் புலால் நாறுவதாயிற்று என்று அவர்தம் பேதைமையை குறிப் பாலே விதந்து கூறுவாள் நம் படப்பைப் புலவுச் சேர் துறுகல் என்கின்றாள். அவர் என்றாள், அவர் யார்?' என்னும் ஆராய்ச்சி அறிவினைச் செவிலியின் நெஞ்சத்தே பிறப்பித்தற்கு என்க. ‘பூக்கெழு குன்றம்’ ‘மணிபுரை குன்றம்’ எனத் தனித்தனியே கூட்டிப் பொருள் கொண்டால், காட்சிக்கிணிமை கூறுகின்றதாக முடியும். இதனால் உருவும் திருவும் சிறந்தானொரு தலைவன் இவட்குளன் என்னும் இறைச்சி தோன்றக் கூறிய தலைவியின் மதி நுட்பம் புலனாதல் அறியப்பெறும். அவன் ஒரு நாட்டிற்கே தலைவன் என்பது தோன்ற அவர் நாடு' என்று குறிப்பிட்ட நயமும் சிந்திக்கற்பாலது. குன்றத்தின்கண் மறி கொன்று பெரிதும் ஆடுதலாகின்ற வெறியாடற் செயலிலும், இச்செயல் சிறந்ததும் எளியதும் ஆகும் என்பாள், குன்றம் நோக்கி நின்று நிலைபெறத் தணிதற்கும் உரித்து'என்று கூறி, செவிலியிடம் சூழ்ச்சி பிறக்குமாறு செய்த தோழியின் திறம் பாராட்டத் தக்கது. தலைவியொருத்தியின் உடல் வேறுபாடு கண்ட தாய் முதலியோர் வெறியாட்டெடுக்கின்றனர். தோழி அறத்தொடு நின்று உண்மை நிலையை வெளிப்படுத்துகின்றாள். மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய பிறங்குகுரல் இறடி காக்கும் பிறந்தாழ் அஞ்சில் ஒதி அசையியற் கொடிச்சி திருந்திழை அல்குங்குப் பெருந்தழை உதவிச் செயலை முழுமுதல் ஒழிய அயல்(து) அரலை மாலை சூட்டி ஏமுற்று றன்றுஇவ் அழுங்கல் ஊரே." 88. குறுந்-214