பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் தொடர்புடையோர் 401 இம்மனை அன்றஃ தும்மனை என்ற என்னும் தன்னும் நோக்கி மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே." (தண்துறை-குளிர்ந்த துறை, தார்-மாலை; அகலம்-மார்பு; புணரிய-புணர்க்க: பரிவு-அவா:புனிற்றுஆ-ஈன்று அணிமை யுடைய பசு இட்டு-கீழே போகவிட்டு; புகுதந்தோன்புகுந்தான், மெய்மலி-உடல் விம்மஎழுந்த மறையினென்மறைத்து; என்ற-என்று சொல்விய, மம்மர்-மயக்கம்; தொழுது நின்றது-தொழுது நின்ற நிலை.) "பாணன் நம் வீட்டில் நுழைந்தபொழுது எனக்கு அடக்க முடியாத உவகை தோன்றிற்று. அதனை யான் அடக்கிக்கொண்டு அவனை நோக்கிச் சென்று, அப்பனே, இஃது உன் வீடு அல்ல; அதோ தெரிகின்றதே, அஃதுவே உன் வீடு!" என்று கூறினேன். அவன் சாலவும் இளிவந்து எனது இகழ்ச்சியும் அவனது இளி வரவும் தோன்றும்படி வருந்தி என்னைத்தொழுது நின்றான். இது நகையாகின்றதன்றோ?' என்று தலைவி கூறிய நாகரிகப் பண்புடன் விளங்கும் கூற்று சாலவும் நாம் வியத்தற்குரியதன்றோ? இக்கூறியவற்றால் நாம் பாணனை மிகத் தாழ்ந்தவன் என்று கருதத் தோன்றுகின்றதல்லவா? உண்மையாக அதுதான் இல்லை; அவன் தரக்குறைவான நடத்தையை உடையவன் அல்லன். ஆயினும், அகப்பாடல்களை ஊன்றிப் பயின்றால் இந்த உண்மை ஒருவாறு தெளிவாகும். பாணன் செய்வதெல்லாம் தலைமகனின்மீது தான் கொண்டிருந்த அன்பு, பரிவு, அக்கறை இவற்றின் பொருட்டேயாகும். எப்படியாயினும் தலைவன் மகிழ்ச்சி தரும் வாழ்க்கை நடத்தவேண்டும் என்பதே அவன் நோக்கமாகும். சில சமயம் தலைவியின் பொருட்டும் தூது சென்று தலைவனைத் தெருட்டி அவளை மகிழ்விக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன. நெடுந்தொகைப் பாடல் ஒன்று இத்தகைய நிகழ்ச்சி யைச் சித்திரித்துக் காட்டுகின்றது. வண்டினம் தவிர்க்கும் தன்பதக் காலை வரினும் வாரா ராயினும் ஆண்டவர்க்கு இனிதுகொல் வாழி தோழி யெனத்தன் பல்லிதழ் மழைக்கண் நல்லகஞ் சிவப்ப 26. அகம்-56 அ-26