பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிப்பொருள் ஒன்றே துவலும் பாடல்கள் 433 தலைவன் தான் மடலேறத்துதுணிந்துள்ளமையைத் தெரிவிக்கின் றான் இப்பாடலில். அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோ ராயின் உரவோர் உரவோ ராக மடவ மாக மடந்தை நாமே." (நீக்கி-துறந்து; துணை-துணைவி; உரவோர்-அறிவுடை யோர்: உரம-அறிவு: ஆக-ஆகுக: மடவர்-அறிவிலேம்.) தன்னைப் பிரிந்து செல்லுதல் அறிவுடைய தலைவர்க்கு அழகன்று என்பதாகத் தலைவி கூறுகின்றாள். பெண்ணென்னும் பொதுமை பற்றித் தன்பால் அருளேனும் துணைவி என்னும் சிறப்பு பற்றி அன்பேனும் உளராயின் நீங்காரென்பது குறிப்பு. காலே பரிதப் பினவே, கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே; அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே." (கால்-கால்கள்; பரி-நடை, தப்பின-ஒய்ந்தன; வாள்-ஒளி) உடன் போக்கில் தான் தேடிச் சென்ற தலைவன்-தலைவி இவர் களைத் தவிர எண்ணற்றவர்களைச் சந்தித்தாகக் கூறுகின்றாள் செவிலித்தாய். உடலினேன் அல்லேன் பொய்யா துரைமோ யாரவள் மகிழ்ந! தானே தேரொடு தளர்நடைப் புதல்வனை யுள்ளிநின் வளமனை வருதலும் வெளவி யோளே! (உடலுதல்-மாறுபடுதல்; உரைமோ-கூறுவாய்; உள்ளிநினைந்து; வெளவியோள்-தடுத்தவள்) தலைவி மகப்பயந்த பின்னர்த் தலைவன் மகவின்பால் பேரன் புடையவனாகத்தான் இருந்தான். ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு ஒரு நாள் சிறிது பிரிந்து மீண்டான். தலைவி அவன் பரத்தமை மேற்கொண்டனன் என்று கருதி அவனோடு புலந்து கூறுகின்றாள். 7. டிெ-20 8. ബ്ലൂ.-44 அ-28