பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

251


(without any reservation) இல்லாமல் மனதாரப் பாராட்டுவேன்” என்றார் அய்யா. சென்னை இம்பீரியல் ஒட்டலில் பிரியாணி விருந்தளித்துச் சிறப்பித்தார் அய்யா. இது வரையில் இந்தவூர் எனக்குச் சொந்தமாயிருந்தது. இனி இதை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறேன் என்று சொல்லி, நாகரசம்பட்டியில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் அண்ணாவுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். தமிழக அரசு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தில், அண்ணாவின் உருவப்படத்தினைப் பெரியார் திறந்து வைத்தார். “ஒட்டுக் கேட்கும் நேரத்தில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசாவிட்டாலும், தயதய என்று ஒட்டுகள் பெற்றுப் பதவியில் அமர்ந்தபின், அண்ணா பழைய “தீ பரவட்டும்” நூலின் ஆசிரியராகவே-மீண்டும் காத்திகராகவே-தன்னைக் காட்டிக்கொள்கிறார்” என்று புகழ்ந்தார்; “தமிழர்களின் நல்வாய்ப்பாக அண்ணாவின் ஆட்சி வந்துள்ளது. இதைக் காப்பாற்றவேண்டும். இதை அழிக்க நினைத்தால் கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்” என்றார் பெரியார்,

அண்ணாவுக்கு உடல்நலங்குன்றி, முதன்முறையாகச் சென்னை பொது மருத்துவமனையில், அவருக்கு உணவுக் குழாயில் புற்று நோய் தோன்றியிருப்பதைக் கண்டு பிடித்தார்கள். இது 6.9.1968. உடனே அமெரிக்கா அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டது. அப்போது அண்ணாவின் வயது 59 முடியும் சமயம் . 15.9.68 அன்று 60 தொடக்கமல்லவா? அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்தார்கள். எனக்கும் அதே 59 வயதில், தொண்டையில், அதே நோய் வந்தது. அறுவை சிகிச்சையின்றி, வேறு முறைகளைக் கையாண்டனர். எனக்குக் கோபால்ட் தெரபி எனப்படும் ஒளிச் சிகிச்சை முறையிலும், கீமோதெரபி எனப்படும் ஊசி மருந்துகள் செலுத்தும் வகையிலும் இப்போது நோயைக் குணப்படுத்த முயல்கின்றனர். இது மருத்துவத் துறையின் 16 ஆண்டுகால முன்னேற்றமோ?