பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

47


ஜனவரி முதல் வாரத்தில் நூல்களை முடித்திட வேண்டுமென எனக்குக் கட்டளை, வழக்கம் போலவே இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு செயல்பட்டேன். இதன் விளைவாய்ப், பல லட்சம் மக்கள் பங்கேற்ற பெருங்கூட்டத்தில், அண்ணா கவியரங்கத்திற்கு ஓடிவந்து கலந்துகொண்டு, திரும்ப ஒடிச் சென்ற ஒன்றைத் தவிர, உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்ச்சி வேறெதையும் நான் காணக்கூட இயலவில்லை!

ஆங்கிலச் சிலப்பதிகார நூலுக்கு, அண்ணாவிடம் ஓர் அணிந்துரை கேட்டார் கலைஞர். “தருகிறேன்” என்று அவரிடம் எளிதாகக் கூறிவிட்டார் அண்ணா. “வாங்கிப் போட்டுக்குங்க சார்” என்று ஆணை எனக்கு. அப்போது முதல், அண்ணாவை அடிக்கடி சந்தித்து, “அண்ணா, சிலப்பதிகாரம்! அண்ணா சிலப்பதிகாரம்!” என்று நினைவூட்டத் தொடங்கினேன். முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள அண்ணாவிடம் எழுதி வாங்குதல் அவ்வளவு எளிதான காரியமா?

நண்பர் கஜேந்திரன்தானே P. A.? அவரிடமும் சொல்லி, அண்ணாவுக்கு நினைவூட்டுமாறு கேட்டுக் கொண்டேன், பலமுறை “ஆகட்டுங்க, கருணானந்தம்.! அண்ணாவுக்கு நேரமில்லிங்க!” என்ற பதிலையே அவரும் அலுக்காமல் தந்து வந்தார். ஒருநாள் எழும்பூர் ரயிலடி சென்று, இரவு திருச்சிக்குப் புறப்பட்ட அண்ணாவைச் சந்தித்து, “வெளியிலிருக்கும்போது, அல்லது ரயிலில் இருக்கும்போது தொந்தரவு குறைவாயிருக்குமே, அண்ணா? இந்தச் சிலப்பதிகார அணிந்துரையை எழுதி வாருங்கள்!” என்று வேண்டிக் கேட்டுக் கொண்டேன். என் பரிதாபத்தைப் பார்த்து இரங்கி, “நாளை மறுநாள் திரும்பும்போது, நிச்சயம் எழுதிக்கிட்டு வர்றேன்யா” என அண்ணா உறுதிமொழி வழங்கினார்கள். மிகுந்த நம்பிக்கையோடு திரும்பினேன். மூன்றாம் நாள் அறு காலையில் எழுந்து, ஒரு டாக்சியில் எக்மோர் சென்தி,