பக்கம்:அன்பு மாலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

33

(கட்டளைக் கலித்துறை)

காலம் கடந்து சுடர்விடும் அந்தக் கடவுளரைக்
கோலம் கடந்த பிரமத்தை யார்கொலோ கூர்ந்தறிவார்?
ஞாலம் கடந்த புகழான் அருணையாம் நன்னகரில்
தூலங்கொள் ராம சுரத்குமார் தன்னைத் துதித்திடுமே.

66

தூலம் - திருமேனி.


ஓங்காரத் துள்ளே ஒளியாய் இருக்குமவ் வுத்தமனைத்
தேங்கார்வத் தோடே தியானிக்கும் உள்ளம் சிறக்கஅருள்
நீங்காத ஞானியாம் ராம சுரத்குமார் நீளடியைப்
பாங்காரப் போற்றிப் பணியுங்கள், எல்லாப் பதம்வருமே.

67

பாங்கு ஆர- முறை அமைய, பதம் - பதவி.


ஆணவம் அற்ற நிலைதன்னை யார்க்கும் அருள்புரிவான்;
நாணமொன் றில்லாத மெய்ஞ்ஞான வாழ்வினை நல்கிடு
பூணவும் பேசவும் ஏத்தவும் நல்ல புனிதன்எனக் [வான்,
காணவும் உள்ளான்நல் ராம சுரத்குமார்,கண்ணியனே!

68


வேதத்தின் செம்பொருள்,ஆகம
நற்பொருள், விளங்குபத்திக்
கீதத்தின் மெய்ப்பொருள், எல்லா
மறிந்தும் கிளர்தெளிவின்
றேதப் படும்மனத் தெல்லோரும்
வந்தே இறைஞ்சுகின்றார்
சேதப் படாத அருள்ராம்
சுரத்குமார் சீரடியே.

69

தெளிவு இன்று - தெளிவில்லாமல், ஏதப்படும் . துன்பத்தை அடையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/39&oldid=1303433" இலிருந்து மீள்விக்கப்பட்டது