பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

113


"தோழி, வாழி சிலரும் பலரும் கடைக்கண்ணால் பார்த்து மூக்கின் உச்சியில் சுட்டு விரலைச் சேர்த்துத் தெருவில் நின்று பெண்கள் அம்பல் துற்றுவர். அதை உண்மை என நம்பி அன்னை சிறிய கோலைச் சுற்றி உன்னை வருத்துவாள் இதைக் கண்டு யான் துன்புற்றேன். கடற்கரைச் சோலையில் புது மலரைத் தீண்டிய பூ மணக்குமிடத்தில் திரட்சியான பிடரி மயிரையுடைய விரைந்து செல்லும் குதிரையைச் செலுத்தி நடுநாளில் வரும் அழகிய தேரை யுடைய தலைவனோடு நீ உடன் போவதற்கு யான் ஏற்பாடு செய்தேன் நீ எழுக. நீ சென்ற பின் இவ் ஆரமுடைய ஊர் அலரைச் சுமந்து ஒழிக,” என்று தோழி தலைவியைத் தலைவனுடன் செல்லக் கூறினாள்.

204. நான் எவ்விதம் உய்வேன்?

மடலே, காமம், தந்தது, அலரே மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே; இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படரப், புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்; எல்லாம் தந்ததன் தலையும் பையென வடந்தை துவலை துவக், குடம்பைப் பெடைபுணர் அன்றில் உயங்கு குரல் அளைஇக், கங்குலும் கையறவு தந்தன்று; யாங்கு ஆகுவென்கொல், அளியேன் யானே?

- ஆலம்பேரி சாத்தனார் நற் 152 “என் காதலோ மடலை (பனங்கருங்கால் செய்த குதிரையை) எனக்குத் தந்தது இவ் ஊர் எடுக்கும் அலரோ ஆவிரை, பூளை, உழிஞை என்ற மலர்களை விரவித் தொடுத்த எருக்க மலர் மாலையை எனக்குத் தந்தது விளங்கும் கதிர் மழுங்கி ஞாயிறு விசும்பிலே மறைந்தது. யாவரும் கொண்டாடுதலைச் செய்யும் நிலவு தனிமைத் துன்பத்தைத் தந்தது. எல்லாம் தந்ததோடு அவற்றின் மேலும் மெல்ல வாடைக் காற்று பனித் துளிகளைத் துரவியது கூட்டிலே தன் பெடையைச் சேர்ந்திருக்கும் அன்றிலின் வருந்தும் குரல் கலந்து கங்குலும் செயலற்று வருந்துதலைத்