பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


யுள்ளாள். அதனாலும், உப்பங்கழியில் உள்ள சுறாமீன் எறிதலால் புண் அடைந்த காலையுடைய நின் ஊர்தியான கோவேறு கழுதையும் நீண்ட நீரையுடைய கழியில் மீண்டும் செல்வதற்கு இயலாதபடி மெலிந்துள்ளது. எனவே, வலிய வில்லையுடைய நின் ஏவலருடன், இந்த இரவில் உன் ஊர்க்குச் செல்லாது, பனை மரங்கள் உயர்ந்த வெள்ளிய மணல் பரவிய தோட்டங்களில் அன்றிற் பறவை தன் துணையை அழைக்கும். அத்தகைய இடத்தே, சிறிய பூக் கொத்துகளையுடைய நெய்தல் கழி சூழ்ந்த எமது பெரிய ஊரில் இளைப்பாறி இருந்து நாளை சென்றால் கெடுவது ஏதேனும் உண்டோ? இல்லையன்றே! என்று இரவு எதிர் பட்ட தலைவனிடம் தோழி சொல்லினாள்.

282. அவள் விழிகளின் இயல்பு

அம்ம வாழி கேளிர் முன்நின்று கண்டனிர் ஆயின், கழறலிர் மன்னோநுண்தாது பொதிந்த செங்காற் கொழுமுகை முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை, பேஎய்த் தலைய பினர்அரைத் தாழை எயிறுடை நெடுந்தோடு காப்ப, பல உடன் வயிறுடைப் போது வாலிதின் விரீஇ, புலவுப் பொருது அழித்த பூநாறு பரப்பின் இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம் கவர்நடைப் புரவிக் கால் வடுத் தபுக்கும் நல்தேர் வழுதி கொற்கை முன் துறை வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற் போது புறங்கொடுத்த உண்கண் மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே.

- வெண்னாகனார் அக 130 கேண்மை யுடையவரே, நீவிர் வாழ்க! யாம் சொல்வதைக் கேட்பீராக; நுட்பமான பூந்துகளால் மூடப்பட்ட சிவந்த தண்டினையும் கொழுவிய மொட்டையும் உடைய கழி முள்ளி பொருந்திய உயர்ந்த மணல் பொருந்திய கரை. அங்குப் பேய் போலும் தலையையுடைய சருச்சரை கொண்ட