பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

39


84. விரைவில் மணந்து கொள்

நாரை நல் இனங் கடுப்ப, மகளிர் நீர் வார் கூந்தல் உளரும் துறைவ 'பொங்குகழிநெய்தல் உறைப்ப இத் துறைப் பல்கால் வரூஉந் தேர்'எனச் செல்லாதீமோ என்றனள், யாயே. - ஜங் 186 தோழி, “நாரையின் நல்ல கூட்டத்தைப் போன்ற மகளிர் நீர் ஒழுகும் கூந்தலை உலர்த்தும் துறைவனே, நீர் மிக்குள்ள உப்பங்கழிகளில் நெய்தல்கள் நீர்த்துளிகளைச் சொரியும் இத் துறையில் பலமுறையும் தேர் வருகின்றது எனச் சொல்லி. ‘இனி வெளியே செல்லாதே’ என எம்முடைய தாய் இல்லத் துள் அடைத்து வைத்தனள். ஆதலால் நீ ஏற்ற ஒன்றைச் செய்வாயாக, அது திருமணம்” என்றாள். தலைவனிடம்:

85. அயலாளரும் ஐயப்படுவர்! நொதுமலாளர் கொள்ளார் இவையே; எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும் நெய்தல்அலம் பகைத்தழைப்பாவை புனையார்; உடலகம் கொள்வோர் இன்மையின், தொடலைக்கு உற்ற சில பூவினரே. - ஜங் 187 “பெருமையுடையாய்! எம்முடன் வந்து கடலாடும் மங்கையர் நெய்தலே தலைமைப்படக் கலந்து தொடுத்து இட்ட கைத் தழையை மணலில் நிறுவி யாரும் பாவைக்குப் புனையர். வேறு மலர்கள் கலவாமல் முற்றும் நெய்தலே

தொடுத்து அணிந்து கொள்வோரும் இலர். ஆதலால் மாலையைத் தொடுப்போரும் இதனிற் சில மலரே கொள்வர்

ஆதலின், இதை யாங்கள் ஏற்றால் அயலாளரும் ஆராய்வ தற்கு இடம் ஆகும்” என்று தொழி கையுறையை ஏற்க மறுத்தாள்.

86. காதலியின் கண்கள் இருங் கழித்சேயிற இனப்புள் ஆரும் கொற்கைக் கோமான் கொற்கைஅம் பெருந்துறை