பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 அருணகிரிநாதர் மூலநாதரும் அருணகிரிநாதரும்” என்னும் தனி நூலிற் காணலாகும். திருமூல நாயனர் ஒரு சித்த புருஷர் என் ருல் அருணகிரியாரும் ஒரு பிரசித்த சித்தராம். 'வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர் சீலமேத்திய சித்தப்ர சித்தரே'-என்பது சித்து வகுப்பு. XVIII. அருணகிரியார் அருளிய நூல்களின் பெருமை தி ரு ப் பு க ழி ன் பெருமை யெல்லாம் எங்கள் திருப்புகழ்ப் பதிப்பிற் காட்டியுள்ள திருப்புகழ் சிறப் புப் பாயிரத்தினின்றும் (மு த ற் பா. க ம் ப க் க ம் (XXIV-XXVI), பல அறிஞர்களின் பாடல்களினின்றும் (மூன்ரும் பாகம்-அருணகிரி நாதர் சரித்திர ஆராய்ச்சி பக்கம் 20-26; அநுபந்தம் I-IX) நாம் அறிகின்ருேம். அருணகிரியார் அருளிய முருகவேளுக்குரிய ஐந்து அருள் நூல்களையும் ஒதிப் பயனடைதலை ஐந்து புநித தீர்த்தங் களில் ஆடிப் பயனடைவதற்கு ஒப்பிடலாம். திருப்புகழின் பரப்பையும், ஆழ்ந்த பெரும் பொருளையும் கருதித் திருப் புகழ் ஒதுதலைச் சமுத்திர ஸ்நாநத்துக்கும்; கந்த ரலங்காரத் தின் துாய்மையையும் அழகையும், தண்ணிய நடையையும் கருதிக் கந்தரலங்காரப் பாராயணத்தைக் காவிரி ஸ்நாநத் துக்கும்; கந்தரந்தாதியின் நடைக் கடுமையையும், எளிதில் பொருள் எட்டாமையையும், (வேண்டும் வரத்தைத் தரும்) பெருமையையுங் கருதிக் கந்தரந்தாதி ஒதுதலை இராமே சுரத்துக் கோடி தீர்த்த ஸ்நாநத்துக்கும், திருவகுப்பின் மேலாந் தரத்ததான பெரும் பொருளையும் புநிதத்தையுங் கருதித் திருவகுப்பு ஒதுதலைக் கங்கா ஸ்நாநத்துக்கும் கந்த ரநுபூதியின் எளிய நடையையும் யாவருக்கும் எட்டும்படி யாய், ஆசாரமாய், உடனே உதவக் கூடியதாய், நித்ய பாராயணத்துக்கு ஏற்றதாய் இருக்கும் தன்மை கருதிக் கந்தரநுபூதிப் பாராயணத்தை அவரவர் வாசஞ் செய்யும் தலத்திலேயே உள்ள கிணருே-திருக்குளமோ-ஆய புநித தீர்த்தத்துக்கும் ஒப்பிட்டு மகிழ்வோம்.