பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
109

மேல் முனை செயல் விளிம்பு உடையதாக இருக்கும்

bott stick : (வார்.) உலோகத் தடுப்புக்கோல் : ஒருமுனையில் ஒரு சீர்மையற்ற விரிவாக்கத்தைக் கொண்டுள்ள 23 அல்லது 12 செமீ நீளமுள்ள இலேசானதொரு இரும்புக் கோல், இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பிலிருந்து வழியும் உலோகத்தை நிறுத்துவதற்காக இதில் ஒரு களிமண் உருண்டை வைக்கப்பட்டிருக்கும்

boundary : வரம்புக்கோடு : வரையறை செய்கிற அல்லது பிரிவினை செய்கிற ஒரு கோடு

boundary light : (வானூ.) எல்லை விளக்கு : ஒரு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் பரப்பளவின் எல்லைகளைக் குறிப்பதற்கு அமைக்கப்பட்ட விளக்குகளில் ஒன்று

boundary marker : (வானூ.) எல்லை வட்டம் : விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்குரிய பரப்பளவின் எல்லைகளைக் குறிப்பதற்காகப் பயன்படும் வண்ணம் பூசிய ஒரு கூம்பு, ஒரு திண்மையான வட்டம். வட்டத்தகடு அல்லது வேறு சாதனம்

Bourdon tube : (தானி, எந்.) அளவீட்டுக் குழாய் : மிக விரைந்து ஆவியாக்கக் கூடிய ஒரு வாயு அடங்கிய முத்திரை மாட்டப்பட்ட குழாய். இதில் வாயு விரிவடையும் போது, அளவு குறிக்கப்பட்ட ஒரு சுழல் வட்டின் மீது இயங்கும் ஒரு முள் அளவினைக் குறித்துக் காட்டும்

bourgeois : (அச்சு.) ஈடுத்தர அச்சு எழுத்துருப் படிவம் : ஏறத்தாழ 9 புள்ளி வடிவளவுள்ள ஒர் அச்சு எழுத்துருவுக்குரிய பழைய பெயர்

bow : (க.க.) வில் வளைவு : ஒரு கட்டிடத்தில் ஒரு வளை வரைவு. அல்லது ஒரு பல்கோணக் கட்ட வடிவம் அமையும் வகையில் முன் பிதுங்கியுள்ள பகுதி

bow compass : வில் வளைவுத் திசைகாட்டி : இது வில்வளைவு அமைப்பு மீது சுழலும் ஒரு சிறிய கவராயம், இதனை உருவரைப் பட வரைவாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் இருகால்களையும் இணைக்கும் ஒரு திருகின் மூலம் ஆக்க முறையான சரியமைவு செய்யப்படுகிறது

bow - heavy : (வானூ.) கீழ்நோக்கிப் பாய்வு : ஒரு விண்கலம் வானில் அசையாத காற்றில் இயங்காமலிருக்கும்போது, கீழ்நோக்கிப் பாயும் அதன் அச்சுடன் சீரமைவாக இருக்கும் நிலை

bow pen : வில் வளைவுப் பேனா : சிறிய வில்வளைவுகளை அல்லது வட்டங்களை மையால் வரைவதற்காகப் பயன்படும் ஒரு கவராயம். மற்ற வில்வளைவுக் கருவிகளில் உள்ளது போலவே இதிலும் கால்களை இணைக்கும் ஒரு திருகின் மூலம் சரியமைவுகள் செய்யப்படுகின்றன

bow pencil : வில்வளைவு வரை கோல் : சிறிய வில்வளைவுகளை அல்லது வட்டங்களைப் பென்சிலால் வரைவதற்குப் பயன்படும் ஒரு வரைமானக் கருவி

bow saw : (மர.வே.) வில் வாள் : வில் போன்ற சட்டத்தில் உள்ள நாண்போல் ஏற்றப்பட்ட ஒடுங்கிய அறுப்பு வாள்

box an-nealing : (உலோ.) பெட்டியில் பதப்படுத்துதல் : மூடிய உலோகப் பெட்டியில் எஃகினைக் கட்டுப்படுத்தி ஆற வைத்தல் மூலமோ, நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கடும் பதப்படுத்தும் முறை