பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
110

boxboard : பெட்டி அட்டை : அட்டைப் பெட்டிகள் செய்வதற்குப் பயன்படும் மடங்கும் தன்மையுடைய கணத்த காகித அட்டை

box column : (க.க.) பெட்டித் தூபி : புகுமுக மண்டபக் கட்டுமானத்தில் பயன்படும் சதுரப்பகுதியில் அழைக்கப்படும் உட்புழைவான தூபி

ox connector : (மின்.) பெட்டி இணைப்பான் : கம்பிவடத்தின் நுனிகளை ஒரு பெட்டியுடன் இணைப்பதற்குப் பயன்படும் மரையுடன் கூடிய உட்குடைவான ஒருவகைக் கோல்

box frame : (க.க.) பெட்டி வரிச் சட்டம் : பலகணிச் சட்டத்தின் பாரங்களுக்காகப் பெட்டிகளையுடைய ஒரு பலகணிச் சட்டம்

box girder : (பொறி.) பெட்டித் தூலம் : இணையான இரு உத்தர்ங்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு துலம். இந்த உத்தரங்களில் உச்சியிலும் அடியிலும் தகடுகள் இணைக்கப்பட்டிருக்கும்

boxwood : (மர.வே.) பெட்டி மரம் : இளமஞ்சள் நிறமுள்ள கடினமான, கரடுமுரடான, மேற்கரண் பரப்புடைய மரம். வரையுருளை, அளவுகோல் போன்ற சிறிய சாதனங்களையும், கருவிகளின் கைபிடிகளையும் தயாரிக்கப் பயன்படுகிறது. இது பயன் படுத்தப்படுவதற்கு முன்பு பல ஆண்டுகள் பதப்படுத்தப்பட வேண்டும். பூக்கக்கூடிய செம்மரமும் பெட்டிமரம் எனப்படும்

Boyle's law : (இயற்.) பாயில் விதி : "வெப்பநிலை மாறாமலிருக்கும் போது ஒரு வாயுவின் கன அளவு, அதன் அழுத்தத்திற்கு நேர்மாறாக மாறுதலடையும்" என்பது இந்த விதியாகும்

brace : (மர.வே.) பற்றிறுக்கி : ஆதாரமாக அல்லது இறுக்கிக் கெட்டிப்படுத்தும் சாதனமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சாய்தளமான வெட்டு மரத்துண்டு

பற்றிறுக்கி

brace bit : (மர.வே.) பற்றிறுக்கித் துண்டு : மரத்தில் துளையிடுவதற்குப் பயன்படும் சாதாரணத் துண்டு. இதில் ஒரு சாதாரணப் பற்றிறுக்கியின் குதை குழியில் பொருத்துவதற்குச் சதுரமான நுனிநோக்கிச் சிறுத்துச் செல்கிற காம்பினைக் கொண்டிருக்கும்

brace frame : (க.க.) ஆதாரச் சட்டம் : இது ஒரு கட்டிடத்தின் வரைச் சட்டம். இதில் மூலைக் கம்பங்கள், பலகணப்படிக் கற்களாலும், தகடுகளாலும் வலுவூட்டப்பட்டிருக்கும்

brace jaws : (மர.வே.) பற்றிறுக்கி அலகுகள் : ஒரு மரத்துண்டின் நுனிநோக்கிச் செல்கிற காம்பினைச் சுற்றி இறுகப் பற்றிக் கொள்கிற ஒரு துண்டுப் பற்றிறுக்கியின் குறடுகள்

bracing : (க.க.) வலிமையூட்டுதல் : ஒரு தட்டுமானத்திற்கு வலுவூட்டுவதற்காகக் கோல்களாலும் கட்டைகளாலும் தாங்கு ஆதாரம் அமைததல்

bracket : தண்டயம் : ஒரு சுவர் மாடத் தண்டயப் பலகைக்கு அல்லது அலங்காரப் பேழைக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் ஒரு ஏந்தற் பலகை

bracket cornice : தண்டய எழுதகம்: வெளியே தெரியும்படி அடுச்