பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
182

cone : கூம்பு : ஒரு வட்டமான அடித்தளத் திலிருந்து ஒரு சீராக நுனிநோக்கிச் சிறுத்துச் செல்கிற ஒரு திடவடிவம். இதன் புறங்குவிந்த மேற்பரப்பின் பரப்பளவு = அடித்தளத்தின் சுற்றளவு x ½ x சாய்வு உயரம்; முழுப்பரப்பளவு புறங்குவிந்த மேற்பரப்பின் பரப்பளவு+ அடித்தளத்தின் புரப்பளவு. இதன் கன அளவு= அடித்தளத்தின் பரப்பளவு x ½ x செங்குத்து உயரம் மட்பாண்டக் கலையில் சூளையின் குவி முகடு.

cone of silence: (மின்) மோனக்கூம்பு : ஒரு வானலை வாங்கியின் மேலுள்ள கூம்பு வடிவப்பகுதி. இதில் கதிரியக்கப் புல வலிமை மிகக்குறைவாக இருக்கும்

cone clutch : (எந்) கூம்பு ஊடிணைப்பி : இது ஒரு வகை உராய்வு ஊடிணைப்பி. இதில் தோலாலான கடைசல் செய்த கூம்பு வடிவ மேற்பரப்புள்ள வழுவழுப்பான உராய்வு மூலமாக இயக்குவதற்குத் தேவையான விசை உண்டாக்கப்படுகிறது

conetrad கூம்பு ஒளிக்கதிர் வீச்சு: இது விமானத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு வகை வானொலி எச்சரிக்கைச் சாதன மாகும். இதனை 1951ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு நிறுவியது. இது மின்காந்த ஒளிக் கதிர்வீச்சுக் கட்டுப்பாடு மூலம் இயங்கக் கூடியது

cone mandrel : (எந்) கூம்புக் குறுகு தண்டு : இது ஒருவதைக் குறுகு தண்டு. இதில் இரு கூம்புகளின் இறுகப் பற்றும் வினையின் மூலம் வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருள் மையமிடப்படுகிறது. இந்தக் குறுகு தண்டில் ஒரு கூம்பு நழுவிச் செல்லாதபடி தடுப்பதற்கு ஒரு குறுக்குப் பட்டை இருக்கும் இதில் இரண்டாவது கூம்பினை இறுகப் பற்றிக் கொள்வதற்கான இழைகளும் இருக்கும்

cone pulley : கூம்புக் கப்பி : இது ஒரு படியிட்ட கப்பித் தொகுதி, இதில் இரண்டு அல்லது ஆவற்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு விட்டமுடைய முகப்புகள் இருக்கும். இது இரண்டு கொண்ட இணையாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரிய முனைக் கப்பிக்கு நேர் எதிராக சிறிய முனைக்கப்பி அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் வேகத்தை அதிகரிக்க முடிகிறது

cone pulley lathe : கூம்புக் கப்பிக் கடைசல் எந்திரம்: கூம்புக் கப்பிகளைக் கடைசல் செய்வதற்கான ஒரு தனிவகைக் கடைசல் எந்திரம்

cone speaker : (மின்) கூம்புத் தொடர்புக் குழல் : இதில் நகரும் கம்பிச் சுருள் ஒரு விறைப்பான காகிதக் கூம்பின் மேல் நுனியுடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும்

conic section : (கணி) கூம்பு வளைவு : ஒரு நேர்வட்டக் கூம்பினை ஒரு சமதளம் குறுக்காக வெட்டுவதால் உண்டாகும் ஒரு வளை வடிவம்

coniferous : குவிந்த காய் காய்ப்பவை: குவிந்த காய் காய்க்கிற மர வகையைச் சேர்ந்தவை

coning angle : (வானூ) கூம்பு கோணம்: விழானத்தின் சுழல் இறகின் ஓர் அலகின் சுழல் அச்சுக்குப் அந்தச் சுழல் அச்சுக்குச் செங்குத் தாகவுள்ள ஒரு சமதளத்திற்கு மிடையிலான சராசரி கோணம்

conjugate axis : இணை அச்சு: ஒரு நீள்வட்டத்தின் மிகக்குறைந்த விட்டம்