பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

high carbon steel : (உலோ.) உயர் கார்பன் எஃகு : 0.50%க்கு அதிகமான கார்பனும். நல்ல நெகிழ்வுப் பண்பும் உடைய எஃகு வகை. இது வெட்டுக் கருவிகள் செய்வதற்கு ஏற்புடையது

high commutator bars : (மின்) உயர் திசை மாற்றுச் சலாகைகள் : எந்திரக் கோளாறுகள் காரணமாக, சுழலும் மின்னகத்தினால் உண்டாகும் மையம் விலகும் விசையின் மூலம் அடுத்துள்ள சலாகைகளுக்கு மேலே எழுகின்ற திசை மாற்றுச் சலாகைகள்

high compression: (தானி எந்.) உயர் அமுக்க இயக்கம் : உள்ளெரி அறையில் வாயுக்கள் அழுத்தப்பட்டுள்ள நிலை. அந்த அறையின் மேல்பகுதியில் சிறிதளவான அழுத்த இடத்தினால் இந்நிலை உண்டாகிறது

high discharge :(மின்) உயர்மின்னிறக்கம்:சேமக்கலத்திலிருந்து பெருமளவில் மின்னோட்டம் பாய்தல்

high fidelity radio : உயர்ஒலி வானொலி: (வானொலி.) சுதிக் கருவி ஒலிபெருக்கி அமைப்புகளைச் சமநிலையில் ஒருங்கிணைப்பதன் மூலம் ஒலியினை மிகத் துல்லியமாகக் கேட்கும்படி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட வானொலி. உயர் அலை அதிர்வெண் துலக்கம், குறைந்த அலை அதிர்வெண் துலக்கம், திரிபு ஆகியவற்றின் மூலம் ஒலித்துல்லியத்தை அளவிடலாம்

high flashing point : தீப்பற்று வெப்பநிலை : தீயை அருகில் கொண்டு சென்றால் உடனே தீப்பற்றிக் கொள்ளக்கூடிய நீர்மத்தின் வெப்பநிலை.

high frequency : (மின்) உயர் அலை அதிர்வெண் : ஒரு வினாடியில் பல்லாயிரம் மாற்றங்களை அல்லது சுழற்சிகளை உடைய மாறுமின்னோட்டம்

high gloss: (வண்) உயர்மெருகு வண்ணம் : உலர்ந்ததும் இனாமல் போன்று பளபப்பர்க இருக்கக்கூடிய வண்ணம்

high lead bronze : (உலோ) உயரளவு ஈயக்கலவை வெண்கலம் : 75% அளவுக்குச் செம்பும், வெள்ளீயமும், ஈயமும் மாறுபட்ட விழுக்காடுகளிலும் கொண்ட உலோகக் கலவை. மிக வேகமாக இயங்கக் கூடிய தாங்கிகள் தயாரிக்க இது பயன்படுகிறது

hígh level modulation : (மின்) உயர்நிலை அலைமாற்றம் : இறுதி மின் பெருக்கியில் தகட்டு மின்னழுத்தத்தின் உயர்ந்த நிலையில் ஏற்படும் அலைமாற்றம்

high light : முனைப்பு மெருகு: அறைகலன்களுக்கு முனைப்பான பகுதிகள் விளக்கமாகத் தெரியும் படி மெருகேற்றுதல்

high maintenance : (மின்) மிகுந்த பராமரிப்பு

high mica: (மின்) மிகை அப்பிரகம்: மெதுவாகத் தளர்ச்சியுறும் தன்மையினால் மின்னகத்தின் செப்புத் திசைமாற்றிச் சலாகைகளை விட அதிகத் திறனுடைய அப்பிரகம்

high potential :(மின்) உயர்மின்னழுத்தம் :அறுநூறு அல்லது அதற்கு மேற்பட்ட ஒல்ட் உள்ள உயர் மின்னழுத்தம்

high potential testing transformer : உயர் மின்னழுத்தச் சோதனை மின்மாற்றி : மின்கட்த்திகள் முதலியவற்றை சோதனை செய்வதற்காகத் தேவையான அளவுக்கு மிக அதிசமான மின்னழுத்தங்களைத் தரக்கூடியவாறு வடிவமைக்கப்பட்ட தனிவகை மின்மாற்றி