பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
367

விமானம் முதலியவற்றின் மீவிசைக் காற்றடைப்புக் குழாய்க்கு எஞ்சின் மேல் மூடியின் புறப் பகுதியிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு குறுகிய நுண்புழை

intake manifold: (தானி) உள்வாய்க் கவர்குழாய்: Y-வடிவிலுள்ள கிளைக்குழாய். இதன் வழியாக எரியும் வாயுக் கலவையும், காற்றும் எரி-வளி கலப்பிலிருந்து இயக்கு பொறிக்குச் செல்கின்றன

intake valve : (தானி) உள்ளிழுப்பு ஓரதர் : நீள் உருளையில் உள் இழுப்புப் பகுதியிலுள்ள ஓரதர்

intarsia ; உட்பதிவு வேலைப்பாடு: மரத்தில் செய்யப்படும் ஒருவகை உட்பதிவு வேலைப்பாடு. 15ஆம் நூற்றாண்டில் இத்தாலியர்கள் இதனைப் பெருமளவில் பயன்படுத்தினர்

integer : (கணி) முழு எண்: ஒரு பின்னமாக இல்லாத முழுமை பாகவுள்ள எண்

integral : முழுமை அளவை: பகுக்க முடியாத உறுப்புகளின் முழுமொத்தம் எடுத்துக்காட்டாக ஒரு முனைந்த பகுதியுள்ள சுற் றுருளையின் முனைப்புகள் அந்த உருளையின் முழுமொத்த உறுப்புகளாகும்

integral calculus : (கணி.) தொகையீட்டுக் கலனம் : வகையீட்டுக் கலனத்திற்கு எதிர்மாறானது. தனியொரு மாறியல் மதிப்புருவின் வகையீடு அறியப்பட்டிருக்கும் போது அதன் சார்புலனைக் கண்டுபிடிப்பது இக்கணிதத்தின் நோக்கம், வளைகோடுகளின் பரப்பளவுகள், வளைகோடுகளின் நீளங்கள்: திடப்பொருள்களின் கன அளவுகள் பரப்பளவுகள், படிமைத் திருப்புமைகள், சராசரி மதிப்பு, நிகழ்தகவு ஆகியவற்றைக் கண்டுபிடிக்க இது உதவுகிறது

integration: தொகையீடு/ஒருங்கிணைப்பு: பல்வேறு உறுப்புகளை ஒருங்கிணைத்து முழுமையாக உருவாக்குதல்

intensifier; (எந்) செறிவாக்கி: குறைந்த அழுத்தத்தினை உயர்ந்த அழுத்தமாக மாற்றுவதற் கென நீரியல் சேமிப்பானுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம்

intensity of light: (மின்) ஒளிச் செறிவு: ஒளியூட்டும் ஆதாரம் ஒன்றன் ஒளியடர்த்தித் திறன்

intensity of pressure : (இயற்.) அழுத்தச் செறிவு : ஒரு பாய்மரத்தின் விசை ஆற்றல் அல்லது வினைத் திறனளவு. இது செயற்படும் இடைவெளிக்கும் இதற்குமுள்ள விகிதத்தின் அடிப்படையில் இது மதிப்பிடப்படுகிறது

interceptor : (வானூ) · இடைமறிப்பு விமானம்: புகை விமானங்களைப் பின்பற்றிச் சென்று துரத்தி இடைமறிப்பதற்கேற்ற பளுவற்ற விரை விமானம்

inter changeable gear : பரிமாற்றப் பல்லிணை : ஒரே மாதிரியான இடைவெளி யளவுடைய பிற பல்லிணை எதனுடனும் முறையாகக் கொளுவி இணையக்கூடியவாறு பற்கள் அமைக்கப்பட்ட பல்லிணை

intercom: (மின்) இடைச் செய்தித் தொடர்பு ; தொழிற்சாலைகள், வாணிக நிறுவனங்கள் போன்ற பல இடங்களில் அலுவல் தங்களைக் கொண்ட அமைவனங்களில் அலுவலகங்களிடையே தொடர்பு கொள்வதற்குப் பயன்படும் இடைத்லைபேசி அமைப்பு முன்றி

intercontinental ballistic missile : (விண்) கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் ஏவுகனை: ஒரு