பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

லூயி (1723-1774) காலத்திற்குரிய பாணியி லமைந்த அறைகலன் வடிவமைப்புகள். இந்த அறைகலன்கள், நேர்கோட்டு அமைப்புகளுடனும், மென்மையான முட்டை போன்ற நீளுருண்டை வடிவுடைய பட்டயத் தகடுகளுடனும் அமைந்திருக்கும். மரத்தாலான இந்த அறைகலன்களில் பெரும்பாலும் வெண்மையான வண்ணம் பூசப்பட்டிருக்கும்

louse:(உயி) பேன் : ஒட்டுயிர்ப்பூச்சி இதன் ஒரு வகை உடலில் காணப்படும்; இன்னொரு வகை மயிரில் காணப்படும். மூன்றாவது வகை இனப்பெருக்க உறுப்புகளைச் சுற்றியுள்ள மயிரில் காணப்படும். இரண்டாவது வகைப் பேன் காரணமாகச் ஜன்னிக்காய்ச்சல் பரவுகிறது

louver: (க.க, எந்.) காற்றுக் கூம்பு: காற்று புகவிடுவதற்கான பலகை அல்லது கண்ணாடிப்பாளங்களின் மோட்டுக் கவிகையடுக்கு

lowboy: (அ.க) ஒப்பனை மேசை: ஆங்கில பாணி ஒப்பனை மேசை அல்லது பல இழுப்பறைகள் உள்ள சிறிய மேசை. இது அதிக அளவு 122மீ. உயரமுடையதாக இருக்கும்

low brass; (உலோ.) மந்தப் பித்தளை: 80% செம்பும், 20% துத்த நாகமும் கலந்த மஞ்சள் நிறமான பித்தளை உலோகக் கலவை. இது எளிதில் கம்பியாக இழுத்து நீட்டக் கூடியது

low carbon steels: (உலோ) மந்தக் கார்பன் எஃகு: 30%-க்கும் குறைவான கார்பன் கொண்ட எஃகு உலோகம். இத்தகைய எஃகு உலோகங்களைப் பரப்பில் கார்பனாக்குவதன் மூலம் கடும் பதப்படுத்தலாம்; ஆனால், செம்பதமாக்க இயலாது

low case: (அச்சு.) சிறு வடிவெழுத்து: ஆங்கில எழுத்து வடிவின் சிறிய பொது முறை உருவம்

lower case: (அச்சு) பொதுமுறை எழுத்து: ஆங்கில நெடுங்கணக்கில் முகட்டெழுத்துகள் அல்லாத சிறிய பொதுமுறை வடிவ எழுத்துகள்

low finish; பழுப்புக் காகிதம்: முட்டையின் வெண்தோடு,கன்றின் தோல் போன்றவற்றிலிருந்து செய்யப்பட்ட பழுப்பு நிறக் காகிதம்

low gear: (தானி.) தாழ்விசை இணைப்புத் திறம்: மிகக் குறைந்த அளவு முன்னோக்கு இயக்க வேகம் உடையதாக இயக்கு உறுப்புகளை அமைத்தல்

low in line; (அச்சு) தாழ்வுறு வரி: அடுத்துள்ள அச்செழுத்தினை அல்லது பொருளைவிடத் தாழ்வாக உள்ள அச்செழுத்து

low - pressure laminates: (குழை.) குறைவழுத்த மென்தகடுகள்: குறைந்த அழுத்த நிலையில் அல்லது அழுத்தம் இல்லாத நிலையில் அறை வெப்ப நிலையில் தயாரிக்கப்படும் மென் தகடுகள்

low relief: (அ.க.)மென்புடைப்புச் சித்திரம்: மேற்பரப்பிலிருந்து சிறிதளவு புடைப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட செதுக்கோவியம்

low tension: (தானி.மின்) தாழ்நிலை மின்சுற்று வழி: முதல் நிலை மின் சுற்றுவழி (6வோல்ட்).

low voltage wiring: (மின்) தாழ் மின்னழுத்தக் கம்பியிடல்: வீடுகளு