பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
409

க்கு மின்கம்பியிடுவதில், குறைந்த மின்னழுத்தம் செல்லுமாறு மின் சுற்றுவழிகளை அமைத்தல்

low-wing monoplane: (வானூ) தாழ்நிலை சிறகு ஒற்றைத்தட்டு விமானம் : விமான உடற்பகுதியின் அடிப்பகுதியில் சிறகுகள் பொருத் தப்பட்டுள்ள ஒற்றை தொகுதி சிறகுகளையுடைய விமானம்

lozenge : வைர வடிவம் : வைரம் போன்று சாய்சதுர உருவம்

lozenge moulding : (க.க) சாய் சதுர வார்ப்படம்: வைரம் போன்ற சாய் சதுர வடிவில் அமைந்த வார்ப்பட அலங்கார வேலைப்பாடும், நார்மானியக் கட்டிடக் கலையில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது

lubricant: (பொறி) மசகுப் பொருள்: உராய்வு காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய், கொழுப்பு, காரீயகம் போன்ற பொருள்கள்.இது வெட்டுமானம் செய்யப்படும் கருவிகளைக் குளிர்விப்பதற்கும் பயன்படுகிறது

lubrication : (பொறி) மசகிடல்: உராய்வைத் தடுப்பதற்காக மசகுப் பொருட்களைக் கொண்டு மசகிடுதல்

lubrication system : மசகிடு முறை : எந்திரங்களில் எண்ணெய் பூசி உராய்வினைக் குறைப்பதற்கான மசகிடல் முறை

ludlow : (அச்சு.) லட்லோ அச்சுப் பொறி: அச்சுக்கலையில், கரைகள், வரிக்கோடுகள், அலங்கார வரிகள் முதலியவற்றை வார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உருக்கச்சு வரிப்பாள எந்திரம்

lug: (எந்.) பிடிவளை: எந்திர வார்ப்புப் பகுதியின் பிடிப்புக் குமிழ்

lugs: (மின்.) பொருத்து முளைகள்: விரைவான இணைப்புக்கு வசதியாக ஒரு மின்கம்பியின் முனைகளில் பொருத்தப்படும் பொருத்து முளைகள்

lumber: (மர.வே.)வெட்டுமரம்: விற் பனைக்கு ஏற்ற பலகைகள், துண்டுகள் போன்ற வடிவளவுகளில் கட்டைகளாக வெட்டப்பட்ட வெட்டுமரம்

lumber jack: (மர.வே) மரத்தொழிலாளி: வெட்டுமரத் தொழிலில் காட்டு மரங்களை வெட்டி வகைப்படுத்தும் தொழிலாளி

lumber scale; வெட்டுமர அளவி: முரட்டுக் கட்டைகளாக வெட்ட மட்ட வெட்டு மரத்தில் பலகை அளவுகளை அளவிடுவதற்குப் பயன்படும் அளவுக் குறியிடப்பட்ட ஒரு சாதனம்

lumen : லூமன் : ஒளிபாயும் அளவினை அளவிடுவதற்கான ஓர் அலகு

lumen bronze : (உலோ.) லூமன் வெண்கலம் : 86% துத்தநாகம் 10% செம்பு,4% அலுமினியம் கொண்ட ஓர் உலோகக் கலவை. மிகுவேகத் தாங்கிகள் தயாரிப்பதற்குக் குறிப்பாகப் பயன்படுகிறது

luminance:(மின்.) ஒளிர்வுத்திறன்: ஒளிக்கதிர் வீச்சின் ஒளிர்வு அளவு தொலைக் காட்சியில் ஒளிர்வுத் திறனைக் குறிக்கும் சொல்

luminance channel: ஒளிர்வு அலைவரிசை: வண்ணத் தொலைக்காட்சியில் ஒளிர்வு அல்லது ஒரே வண்ணச் சைகையை மட்டுமே செலுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மின்னியல் சுற்றுவழிகள்

luminosity: (மின்) சுடர் ஒளித் திறன்: இருளில் ஒளி வீசுகின்ற திறன்