பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

435

ரஜன் அணுவின் எடையுடன் ஒப்பிடும் போது ஒரு மூலக்கூற்றின் எடை. எடுத்துக்காட்டு: CO2 மூலக்கூற்றில் ஒரு C அணுவும் (அணு எடை 12), இரு ஆக்சிஜன் அணுக்களும் (அணு எடை 16) அடங்கியுள்ளன. எனவே, இதன் மூலக்கூற்று எடை 12 + 2 X 16 = 44

molecule: (மின்னி.) மூலக்கூறு: அணு என்பது ஒரு தனிமத்தின் மிதிச் சிறிய பகுதி, ஒரு மூலக்கூறு என்பது, தானாகவே உயிர் வாழக் கூடிய ஒரு பொருளின் மிகச் சிறிய துகள். இது, மின்னியல் விசைகளினால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கும் அணுக்களின் ஒரு தொகுதியாகும், கூட்டுப் பொருளில் உளளது போல் அணுக்கள் வேறுபட்டிருக்கலாம். எடுத்துக்காட்டு: H2O சில தனிமங்களின் ஒரே மாதிரியாக இருக்கலாம். எடுத்துக் காட்டு:H2 (ஹைட்ரஜன் மூலக் கூறு)

molecule: (வேதி; இயற்.) மூலக்கூறு: ஒரு பொருளில் அடங்கியுள்ள மிகச் சிறிய நுண்கூறு. இதன் பண்பு, பொருளின் பண்பிலிருந்து மாறுபடாதிருக்கும்

molybdenite : முறிவெள்ளித்தாது: முறிவெள்ளி (மாலிப்டினம்) என்னும் உலோகத்தின் தாது. இது பசைத்தன்மையுடன் காரீயகப் பொருள் போல் இருக்கும். இது கருங்கல், அடுக்குப்பாறை, சுண்ணாம்புக்கல் ஆகியவற்றுடன் கலந்திருக்கும்

molybdenum: (உலோக.) முறிவெள்ளி (மாலிப்டினம்): தகர்வியல்புடைய வெள்ளி நிறம் கொண்ட உலோகம். அதிவேக வெட்டுக்கருவிகளைச் செய்வதற்கான எஃகு உலோகக் கலவைகளைச் செய்வதற்குப் பயன்படுகிறது

moment: (பொறி.) நெம்புதிறன்: ஒரு விசைக்கும். அந்த விசை செயற்படும் புள்ளியிலிருந்து அதன் செயல்வினைக் கோட்டின் செங்குத்துக் கோட்டுக்குமிடையிலான பெருக்குத் தொகை. சுழலச் செய்யும் ஆற்றலின் அளவீடு

moment of a couple: (கணி.) இருவிசை இணைவு கெம்புதிறன்: விசைகளில் ஒன்றுக்கும், விசைகளின் செயல்விசைக் கோடுகளுக்கிடையிலான செங்குத்துத் தூரத்திற்குமிடையிலான அளவுகளின் பெருக்குத் தொகை

moment of a force: (பொறி.) நெம்புதிறன்: சுழலச் செய்யும் ஆற்றலின் அளவீடு. இது அடி-பவுண்டு, அங்குலம்-பவுண்டு என்ற அளவுகளில் அளவிடப்படுகிறது

moment of inertia: (பொறி.) மடிமை கெம்புதிறன்: நகரும் பொருளின் ஒவ்வொரு துகளினையும் அவற்றின் நடுநிலை அச்சிலிருந்து அத்துகளின் தொலைவுகளின் வர்க்கங்களால் பெருக்கி வரும் பெருக்குத் தொகைகளின் கூட்டுத் தொகை

momentum : உந்துவிசை : இயக்க உந்து விசையின் ஆளவு. இது ஒரு பொருளின் பொருண்மையை அதன் வேக விகிதத்தினால் பெருக்குவதால் கிடைக்கும் பெருக்குத் தொகையாகும்

mond gas : (வேதி.) வாயுக் கலவை : கார்பன் மோனாக்சைடு, கார்பன்டையாக்சைடு, ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகிய வாயுக்களின் கலவை இக்கலவை, நிலக் கரி மீது காற்றையும் 650°C வெப்பமுடைய நீராவியையும் செலுத்தும்போது உண்டாகிறது

monel metal : (வேதி.) மோனல் உலோகம் : 67% நிக்கல், 28% செம்பு, 5% கேர்பூால்ட் இரும்பு அடங்கிய ஓர் உலோகக் கலவை