பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

இது அரிமானத்தை எதிர்க்கக் கூடியது. அமிலத்தினால் அரிமானம் ஏற்படாத வேதியியல்சாதனங்கள் செய்ய இது பயன்படுகிறது

60% நிக்கல் 38% செம்பு, சிறிதளவு அலுமினியம் கொண்ட உலோகக் கலவையையும் மோனல் உலோகம் என்பர்

mond “seventy” alloy : (உலோ.) மாண்ட் "70" உலோகக் கலவை: நிக்கலும் செம்பும் கலந்த ஒர் உலோகக் கலவை. இதன் விறைப்பாற்றல் 40828 கிலோ கிராம் வரை உயர்வாக இருக்கும்

monitor :' (மின்.) உளவுச் செய்தியறிவிப்பு: அயல்நாட்டுவானொலி, தொலைக்காட்சி ஒலி-ஒளிபரப்புகளை ஒற்றுக் கேட்டுச் செய்திகளைத் தெரிவித்தல்

monkey wrench : இயங்கு குறடு: இயங்கு அறுவடைத் திருகு குறடு. இதனைக் கண்டுபிடித்தவர் தாமஸ் மிங்கி. அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது

monobloc : (எந்.) ஒற்றைப்பாளம் : ஒரே துண்டாகவுள்ள வார்ப்படம்

monochrome television: (மின்.) ஒரு நிறத் தொலைக்காட்சி : ஒரே நிறத்தின் பல சாயல்களில் படங்களைக் காட்டும் தொலைக்காட்சி; கறுப்பு-வெள்ளைப் படங்கள்

monogroph: (அச்சு.) தனி வரைவு நூல் : ஒரே பொருள் அல்லது ஒரினப் பொருட்கள் பற்றிய தனி நூல்

monolith : ஒற்றைப் பாளக்கல் : தன்னந்தனியாக நிற்கும் மிகப் பெரிய அளவிலான ஒரே பாளமாகவுள்ள கல்

monomer : (வேதி;குழைம.) எண் முகச் சேர்மம் : ஒரே முற்றுறா வாய்பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம். பிளாஸ்டிக் தயாரிப்பில் இவற்றின் வினைகள் ஒரு மீச்சேர்மத்தை உண்டாக்குதல்

monomial : (கணி.) ஓருறுப்புக் கோவை : இயற்கணிதத்தில் ஒரே உறுப்பினைக் கொண்ட கோவை

monoplane : (வானூ..) ஒற்றைத் தட்டு விமானம் : ஒற்றைத் தொகுதிச் சிறகுகளையுடைய விமானம்

monopropellant : (விண்.) தனிமுற்செலுத்தி: எரிபொருளும், ஆக்சி கரணியும் உடனடியாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே கலந்து வைக்கப்பட்டுள்ள ராக்கெட் முற்செலுத்தி

monorail crane : (பொறி.) ஒற்றைத் தண்டவாளப் பாரந்துக்கி : ஒற்றைத் தண்டவாளத்தில் இயங்கும் நகரும் பாரந்துக்கி

monoscope: சோதனை ஒளிப்படக்கருவி : சோதனைகளுக்காகப் பயன்படும் எளிய ஒளி அல்லது தோரணி அமைப்பைக் கொண்ட தொலைக்காட்சி ஒளிப்படக்கருவி

monotone: (அச்சு.) சமநிலை அச்செழுத்து : எல்லாக் கூறுகளும் சம அகலத்தில் உள்ள அச்செழுத்து முகப்பு

monotron hardness test : வைரகடினச் சோதனை : வைரத்தின் ஊடுருவும் ஆழத்தினைக் குறிப்பிட்ட பார நிலைகளில் எண் வட்டில் பதிவு செய்யக்கூடிய ஒரு சோதனை எந்திரம்

monotype : (அச்சு) எழித்துருக்கு அச்சுப் பொறி : தனித்தன் அச்சுரு