பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

651

uniform load : (பொறி.) மாறா நிலைச் சுமை : வேறுபர்டின்றி மாறாத நிலையிலுள்ள சுமையளவு. இதில் எஞ்சினின் கட்டமைப்புச் சுமையும், அதில் ஒரு சீராகப் பரப்பி வைக்கப்பட்டுள்ள பாரத்தின் சுமையும் உள்ளடங்கும்

unilateral conductor : (மின்.) ஒருபக்க மின்கடத்தி : ஒரே திசையில் மட்டுமே மின்னோட்டத்தைக் கடத்தக்கூடிய ஒரு சாதனம்

unilateral tolerance : ஒரு பக்கத்திறம் : அடிப்படைப் பரிமாணத்திலிருந்து ஒரு பக்கம் கூடுதலாகவோ குறைவாகவோ வேறுபடுவதற்கு இடங்கொடுக்கும் அமைவு. எடுத்துக்காட்டு:13.36-5.08செ.மீ

union : (கம்.) கூட்டிணைப்பு : குழாய்களை இணைத்தல் அல்லது பொருத்துதல்

uniphase : (மின்.) ஒற்றை நிலை மின்னோட்டம் : ஒரே நிலையுடைய மின்னோட்டம் அல்லது மின்னழுத்தம்

unit charge : (மின்.) அலகு மின்னேற்றம் : சமஅளவு மின்விசையின் மீது ஒரு டைன் விசையைச் செலுத்தி ஒரு சென்டிமீட்டர் தூரம் நகர்த்தக் கூடிய மின்விசையின் அளவு

unit magnetic pole : (மின்.) அலகு காந்தத் துருவம் : ஒரு செ.மீ. தூரத்திலுள்ள சம அளவு ஆற்றல் வாய்ந்த ஒரே துருவத்தை ஒரு டைன் (நொடி விசையழுத்தம்) ஆற்றலுடன் விலக்குகிற காந்தத் துருவம். ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு செமீ. விழுக்காடு செலுதத வல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு ஆகும்

unit measurement : (மின்.) அலகு அளவு : மற்ற அளவுகளுடன் ஒப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் செந்திற உயர்வு அளவுகள்

unit of Illumination : (மின்.) ஒளியடர்த்தி அலகு : மெழுகு விளக்காளி.ஒரு விளக்கின் ஒளிர்திறன். சராசரி கோள மெழுகு விளக்கொளி என்பது, விளக்கின் மையத்திலிருந்து எல்லாத் திசைகளில் சராசரியாக பரவும் ஒளியின் திறன் ஆகும். சராசரி கிடைமட்ட விளக்கொளி என்பது, விளக்கின் ஒளிமையத்திலிருந்து கிடைமட்டத் தளத்தில் பரவும் சராசரி ஒளித்திறன் ஆகும்

unit of magnetic flux : (மின்.) காந்தப்பாய்வு அலகு : ஒரு காந்தப் பொருளில் இணைக்கப்பட்டுள்ள காந்த விசை வழிகளின் மொத்த எண்ணிக்கை. இது, ஒரு காந்தச் சுற்று வழியில் பாயும் காந்த ஓட்டமாகக் கருதப்படுகிறது

unit of magnetic intensity : (மின்.) காந்த அடர்த்தி அலகு : காந்த இயக்க விசையின் அலகு. காந்தச் சுற்று வழியின் மூலமாக காந்தவிசை வழிகளைச் செலுத்தும் காந்த அழுத்த விசை

unit of magnetic reluctance : (மின்.) காந்தத் தடை ஆலகு : காந்த மூட்டிய பொருளினால் காந்தப் பாய்வுக்கு ஏற்படும் தடையின் அளவு

unit power plant : (தானி.) மின்னாக்கி அலகு : உந்து ஊர்தியில் மின்னாக்கம் செய்வதற்கான எந்திரப் பகுதிகளின் முழுத் தொகுதி. இதில் மின்னோடி, மின் செலுத்தி, மின்னோடியின் துணைக் கருவிகள் அனைத்தும் அடங்கும்

unit stress : (பொறி.) அழுத்த விசை அலகு : ஓர் அலகு பரப்புப்