பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

97



527.சரியாய் மெச்சக் கற்றுக்கொள். வாழ்வின் பேரின்பம் அதுவே. பெரியோர் மெச்சுபவைகளைக் கவனி; அவர்கள் பெரிய விஷயங்களையே மெச்சுவர்; தாழ்ந்தோரே இழிவான விஷயங்களை மெச்சவும் வணங்கவும் செய்வர்.

தாக்கரே

528.வீசு, குளிர்காற்றே! வீசு. மனிதனுடைய நன்றியறியாமைப் போல நீ அவ்வளவு அன்பற்றவன் அல்ல; உன் மூச்சு சீறினாலும் உன் பற்கள் கூரியதாயில்லை.

ஷேக்ஸ்பியர்

529.நன்றியறிதல் என்பது அதிக கவனமாய் உண்டாக்க வேண்டிய பயிராகும். அதைக் கீழோரிடைக் காண முடியாது.

ஜான்சன்



31. இன்சொல்

530.இன்சொல் வழங்குவதால் நாக்கு காயமுறுவதில்லை.

ஹேவுட்

531.இன்சொற்களின் விலை அற்பம், ஆனால் அதன் மதிப்போ அதிகம்.

ஹெர்பர்ட்