பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

41


தாமஸ் பெய்ன்

 199.உலகமே என் தேசம், நன்மை செய்வதே என் சமயம்.

தாமஸ் பெய்ன்

200.மனிதர் அனைவருக்கும் மதமாகிய கடிவாளம் தேவை. 'மரணத்திற்குப்பின் யாதோ?’ என்னும் பயமே மதம்.

ஜார்ஜ் எலியட்

201.அவனியிலுள்ள சமயங்களில் அறத்தாறு உய்ப்பது ஒன்றே உண்மைச் சமயம்.

ஸவனரோலா

202.நம்மிடம் பகைப்பதற்குப் போதுமான சமய உணர்ச்சி உளது. ஆனால் அன்பு செய்வதற்குப் போதுமான அளவு இல்லை.

ஸ்விப்ட்

203.ஞானிகள் அனைவர்க்கும் ஒரே மதமே. அவர்கள் தத்தம் மதத்தை வெளியே கூறுவதில்லை.

லார்ட் ஷாப்ட்ஸ்பரி

204.பண விஷமாய் நம்பத் துணியாத இடத்தில் ஆன்ம விஷயமாய் நம்பத்துணிவது எவ்வளவு விபரீதம்! மதாசாரியர் காலணா கொடுத்தால் அது செல்லுமோ செல்லாதோ என்று சந்தேகிப்போம். ஆனால் அவர்கள் கூறும் மதத்தை ஆராயாது சரி என்று அங்கீகரித்து விடுகிறோம். என்னே மனிதர் மடமை!

பென்

3