பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

53


ஷில்லர்

270. லெளகீக வாழ்வினின்று விடுதலை பெற இரண்டு வழிகள் உள. ஒன்று இலட்சிய வாழ்விலும், மற்றொன்று மரணத்திலும் சேர்க்கும்.

ஷில்லர்


271.முடிவில் பிரதானமானது நாம் எண்ணுவது எது, அறிவது எது, நம்புவது எது என்பதல்ல. நாம் செய்வது எது என்பதொன்றே பிரதானமான தாகும்.

ரஸ்கின்

272. ஒருவன் பிறர் லட்சியத்திற்காக இறக்க முடியும். ஆனால் அவன் வாழ்வதானால் தன் லட்சியத்திற்காகவே வாழ வேண்டும்.

இப்ஸன்

273.தன் சக்தி எவ்வளவு உயர்ந்ததாயும் எவ்வளவு அளவொத்ததாயும் அபிவிருத்தியடைய முடியுமோ அவ்வளவு அபிவிருத்தியும் அடைவதே ஒவ்வொருவனுடைய லட்சியமாயிருக்கவேண்டும்.

ஹம்போல்ட்

274.மனிதர் அவசியம் கவனிக்க வேண்டிய உண்மையான, நியாயமான, கெளரவமான விஷயம் தங்களைச் சுற்றியுள்ளவர், தங்களுக்குப் பின் வாழப் போகிறவர் இவர்களுடைய நன்மையை நாடுவதே.

ஹாரியட் மார்ட்டினோ