பக்கம்:அலைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 O லா. ச. ராமாமிருதம்



"ஐயா சோறு கண்டு மூணு நாளாச்சு!" இது என் குரல் தானா? பூமியின் குடலிலிருந்து வருதே? இருளோன்னு வருது.

"ஏனய்யா, பசிக்கிறவங்களுக்கெல்லாம் மூணு அது என்ன கணக்கய்யா?”

"பசி எல்லாருக்கும் ஒண்ணுதான் அண்ணா. பசி வேளைக்கு ஆனையிலிருந்து எறும்பு வரைக்கும் எல்லாத்துக்கும் ஆனைப் பசிதான்."

"சரிதாண்டா! நீ பெரிய தருமராசா! எனக்குத் தெரியுமே, நாயம் சொல்ல வந்துட்டான் பெரிய நாயம்!”

"சாமியாரே நீங்க சும்மா திண்ணையிலே குந்துங்க. நெஞ்சிலே ஒண்ணும் வெக்காதிங்க. அண்ணனுக்கு பேச்சுத் தான் நெடி. மனசு பிஞ்சு. சமையலாவுது, ஆவட்டும்.’’

உஸ்-அப்பாடா, மூச்சோ அல்ல என் உயிர்தான் பிரிஞ்சுப் போச்சோ? இப்போ சாய இந்தத் துரண் மாத்திரம் இல்லாட்டி புடலம் பிஞ்சா சுருண்டுடுவேன். அப்பா என்னைக் குந்தச் சொன்ன வாய்க்கு உன் வவுறு எப்பவும் குளுகுளுன்னு இருக்கணும்! ஐயோ என் வவுத்துக் குழி எனக்கே பயமாயிருக்குதே! பானையிலே வடிச்சதத்தினியும் இலையிலே சாய்ச்சாலும் குழி அடையுமா? ஆண்டவனே! நீ இருக்கையா?

“அப்பா!"

இரு சகோதரர்களும் திடுக்கிட்டுத் திரும்பினர். மூத்தவன் முகத்தின் மாறல் காணச் சகிக்கவில்லை. முகத்தின் மீது அவ்வேளையின் சுழிப்பு தன் முழு வேகத்தில் மோதி உடைந்து விரிசல்கள் அடுக்கடுக்காய் நெற்றியிலும் கன்னங்களிலும் வாயோரங்களிலும் 'விர்ரென' ரேகையோடின.

கண்ணாடி உடைஞ்சாப் போலே

"சின்னதா பேசினது?" அவன் பேச்சு, கேவிய மூச்சில் தொத்தி வந்து வெளிக்காற்றுடன் கலந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/160&oldid=1288547" இலிருந்து மீள்விக்கப்பட்டது