பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 85 புரிந்துவிட்டதாம்! இனிமேலும் அவனைக் குழந்தையாய் நினைக்கப்படாதாம். ஊர் வாயின் கோரை பற்களான இவர்கள், பத்திரிகைகளுக்குத் தக்கபடி கதை எழுதும் எழுத்தாளர் போல், அந்தப் பக்கமாக வந்துபோன பெண்கள் எல்லோரையும் அவர்களின் குடும்பப் பின்னணிக்குத் தகுந்தாற்போல் விமர்சனம் செய்தாகிவிட்டது. ஒரு எளியவனின் மகள் புல்லுக்கட்டு சுமந்து போனபோது, "எதையோ சுமக்க வேண்டிய வயசில. இதை சுமக்கியம்மா" என்று வெளிப்படையாகவே கேட்டாகிவிட்டது. ஊரான் வீட்டுப் பெண்களைத் தங்கள் வீட்டுச் சங்கதிகள் தெரியாமல் விளாசியாகி விட்டது. ஒரு மிராசுதாரர் பெண்ணைப் பார்த்ததும் முன்னாலும் பேசாமல், பின்னாலும் பேசாமல் விட்டாகிவிட்டது. ஏனென்பது அவர்களுக்கே தெரியும். அவள் அண்ணன், சண்டை கோழி. மூக்கில் கொத்துவான். அப்பா, அடியாளை வைத்து உதைப் பார். ஆக மொத்தத்தில், இவர்கள் மூஞ்சுகளை அயிரை மீனை உரசுவதுபோல, இந்தப் பாலத்திலேயே வைத்து உரசிவிடுவார்கள். ஆகையால் அந்தப்பெண் போவது வரைக்கும் தலைகளைத் தாழ்த்திக் கொண்ட அந்த வீரர்கள் பிறகு வேறு யாரும் கிடைக்காததால், ஒரு ஆணை விமர்சித்து, அதன் விளைவாய்த் தங்களைத் தாங்களே விமர்சித்துக்கொண்டார்கள். சுய விமர்சனம் என்றைக்குமே அலுப்புத் தருவது. அது அவர்களுக்கும் வந்தது. திடீரென்று விடலைப்பையன் கத்தினான். "அங்க. பாருங்க. கேனயன் வேலுச்சாமி வாரான், வாயக்கிளறலாம். நல்லா நேரம் போவும்." எழுந்திருக்கப்போன லட்சுமணன், இரண்டு கால்களையும் மடித்துப் பாலத்தில் வைத்துக்கொண்டார். 刁少7,