பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிவு கடந்த அகன்ற வெளி,

அதன் பனிபடர்ந்த பாகம்,

அங்கிருந்தே கவிஞனிடம்

விரைகின்றன கவிகள்.

அவன் பாடும் பாடல்கள்

அவனுடையன என்போம்,

அவனுடையன அல்ல என்போம்;

அவன் பெறும் புகழ்

அவனுடையது என்போம்,

அவனுடையது அல்ல என்போம்.

இரவு பகலாய் எண்ணங்கள் தொடர்கின்றன.

செவி சாய்ப்பான். தேவி எழுதென்றால்

பணிவதே அவன் கடன்.