பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VI


வேலை - வேலை - வேலை;
என் வேலைக்கு ஓய்வுமில்லை ஒழிவுமில்லை!
ஆனால், என் வேலைக்குக் கூலி என்ன?
வைக்கோற் பாய் - ரொட்டிப் பொறுக்கு
கந்தை உடை, ஒடிந்த குறிச்சி,
ஒழுக்குக் கூரை - ஒன்றும் விரியாத் தரை,
வெறுஞ் சுவர் - சித்திரமும் கிடையாது!
சிற்சில சமயம் சுவரில் என் நிழல் விழும்!
அதுதான் சித்திரம்! - அதுதான் ஆறுதல்!

VII


வேலை - வேலை - வேலை!
நிமிஷந்தோறும் வேலை! - ஆயினும் என்ன?
வேலைதான் - ஓயாத வேலைதான்!
சிறைப் பட்டார் போல் நான்
செய்த குற்றம் யாது?
கைகள் - கழுத்து - காசா - தையல்,
காசா - கழுத்து - கைகள் - தையல்!
ஆம், அகம் நொந்து அயரும்வரை தையல்
கையும் மூளையும் விறைக்கும் வரை தையல்!

VIII


மார்கழி மாதம் மங்கிய ஒளியில்
வேலை - வேலை - வேலை!
பனி யொழிந்து பரிதி வந்தும்
வேலை . வேலை - வேலே!