பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 195 மாற்றிக் கொண்டிருந்தது. ஒரு பார்லிமென்ட் தூதுகோஷ்டியை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவும், சமரசம் செய்து கொள்ளவும் நினைத்தது.

நாட்டில் மாதர் நலனுக்குப் பயன்படுத்தும் பொருட்டு கஸ்தூரிபாய் காந்தி நிதி ஒன்று திரட்டப்பட்டது. ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்தது அந்த நிதிக்கு.

புதிதாக வேவல்துரை வைஸ்ராயாக வந்தார். 1942 போராட்டத்தில் கைதான தலைவர்கள் நாற்பத்தைந்தாம் ஆண்டின் முற்பகுதியில் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டார்கள். ராஜாராமனும் விடுதலையானான்.

நாற்பத்தைந்தாம் ஆண்டில் தமிழ்நாட்டுக் காங்கிரஸில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. நாற்பத்திரண்டிலேயே காங்கிரஸிலிருந்து ராஜிநாமா செய்திருந்த ராஜாஜி திடீரென்று திருச்செங்கோட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிப்பு வந்ததும், அந்தத் தேர்தல் செல்லாதென்று மறுக்கப்பட்டதோடு - 1945 அக்டோபர் 30-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் ஒரு மகாநாடு கூட்டுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காங்கிரஸ் என்ற மகாவிரதத்தில் எப்போதோ ஆரம்பமாகியிருந்த சிறிய பிளவு தமிழ்நாட்டில் இப்போது ஒரு சலனத்தையே உண்டாக்கிவிட்டது. திருப்பரங்குன்றம் மகாநாடு தமிழ்நாட்டுக் காங்கிரஸில் ஒரு திருப்பத்தையே உண்டாக்குவதாக வந்து வாய்த்ததை யாவரும் உணர்ந்தனர்.

திருப்பரங்குன்றம் மகாநாட்டில் முத்துராமலிங்கத் தேவர் கொடியேற்றினார். பேட்டை முத்துரங்க முதலியார் தொடங்கி வைத்தார். கல்லிடைக்குறிச்சி யங்ஞேஸ்வரசர்மா மகா நாட்டுக்குத் தலைமை தாங்கினார். திருச்செங்கோடு தேர்தல் செல்லாதென்று கண்டித்துப் பலர் பேசினார்கள். அத் தேர்தலைக் கண்டித்துத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் காரியக் கமிட்டிக் கூட்டமும் நடைபெற்றது. இந்தியா முழுவதும் எந்த ஒற்றுமைக்காகச் சுதந்திரப்