பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 231 அதைவிட விசாலமான பணிகளுக்கு வந்துவிட்டது.

ஆசிரமப் பணிகளிலும், நண்பர்களின் கூட்டுறவிலும்

உயிர்க்குயிராக நேசித்தவளை மரணத்துக்குப் பறிகொடுத்த

துயரத்தை மறக்க முயன்றான் ராஜாராமன். எவ்வளவோ மனத்தைத் தேற்றிக் கொள்ள முயன்றும் சில சமயங்களில்

சோகம் அவன் மனத்தைக் கவ்விச் சித்ரவதை செய்தது.

சில வேதனையான மனநிலைகளில் தன் அறையில் வைக்கப்பட்டிருந்த அந்த வீணையையே இமையாமல் பார்த்தபடி பைத்தியம் போல் நேரம் போவது தெரியாமல் அமர்ந்திருப்பது அவன் வழக்கமாயிருந்தது. அப்படி வேளைகளில் ஜடப்பொருளான அந்த வினையும் அவனோடு பேசியிருக்கிறது, பாடியிருக்கிறது. ஆத்மாவுக்கு மட்டுமே புரிகிற ஆத்மாவின் அநுராகங்களையும், ராகங்களையும், தாபங்களையும், தவிப்புகளையும் சொல்லியிருக்கிறது. ஒரு பிரமையைப் போலவும், நிஜத்தைப் போலவும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த வீணையின் ஒலி அவன் செவிகளை மட்டும் நிறைத்திருக்கிறது. வளையணிந்த தந்தக் கைகள் அதன் தந்திகளை மீட்டி நிசப்தமான நள்ளிரவு வேளைகளில் அவனுக்கு மட்டுமே கேட்கும்படியான மதுர சங்கீதத்தை வாரி வழங்கியிருக்கிறது. இன்னும் சில வேளைகளில் அந்த வாத்யத்துக்குப் பதில் மதுரமே அங்கு நளினமாக ஒடுங்கி உறங்குவதுபோல் ஒரு பிரமை அடைந்து மனம் தவித்துத் துடித்திருக்கிறான் அவன். பிருகதீஸ்வரனும், நண்பர்களும்கூட அவன் படும் வேதனையை அறிந்து நெகிழ்ந்து போயிருந்தார்கள். காலம் தான் மெல்ல மெல்ல அவன் மனப் புண்ணை ஆற்ற வேண்டுமென்று தோன்றியது அவர்களுக்கு. : . . . . . . . ‘. .

x * 、★,★

1946-ஆம் வருஷம் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் இந்திப் பிரசார சபை வெள்ளி விழாவிற்குத்