பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 45 -அம்மாவின் அழுகை அடங்கியது. அவன் மனம் கவலையிலாழ்ந்தது. ஒன்றுமே செய்து முடிக்காமல் தான் கைதாகி விடக்கூடாது என்பதில் அவன் அதிக அக்கறையோடு இருந்தான். சிறிதோ பெரிதோ ஒவ்வொரு மழைத் துளிக்கும் பிரவாகத்தில் பங்கு உண்டு. இந்த மறியல்களை எல்லாம் அவனைவிடப் பெரியவர்கள் கடந்த காலத்தில் நிறைய நடத்தியிருந்தார்கள். இப்போது அவன் மீண்டும் நடத்த விரும்பியதற்குக் காரணமாக இருந்த உள் முனைப்பை விட்டுவிட அவன் தயாராயில்லை. உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் போய்க் கைதாக முடியாத வேதனையை அவனும், அவனைப் போன்றவர்களும் இப்படித் தணித்துக் கொள்ள விரும்பினார்கள். கைதாகிச் சிறைகளில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர் களின் வேதனை தங்கள் இதயத்திலும் எதிரொலித்துத் தூண்டுகிறது என்பதைக் காட்டவே அவன் இதைச் செய்ய விரும்பினான். போலீஸ் வீட்டுக்கும் தேடி வருமோ என்ற முன்னெச்சரிக்கை அவன் மனத்தில் இருந்தது. எப்படித் தப்புவதென்ற முன்யோசனைகளும் அவன் உள்ளத்திலிருந் தன. வீட்டிலேயே இருந்து இன்னும் ஒரு நாளைக் கழித்துவிட விரும்பினான் அவன். இன்னும் ஒரு நாளைக் கழித்துவிட்டால், அப்புறம் அடுத்த நாள்தான் அந்தத் துணிக்கடை மறியலுக்குக் குறித்திருந்த தினம். ஒரு விநாடியாவது மறியலை நடத்தி விட்டோம் என்ற பெருமிதத்தோடு கைதாக வேண்டுமென்றிருந்தான் அவன்.

இரவு எட்டு மணிக்குச் சாப்பிட உட்காருமுன் கைகால் கழுவிவர அவன் பின்பக்கம் கிணற்றடிக்குப் போனபோது அங்கே கோடைக்காகக் கட்டிலை எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த பக்கத்துப் போர்ஷன் வக்கீல் குமாஸ்தா திருவேங்கடம் அவனை வம்புப் பேச்சுக்கு இழுத்தார். - - -

"என்னப்பா ராஜாராமன், இந்த உப்பு சத்தியாக்கிரகம், அந்நியத் துணிமறியல், கள்ளுக்கடை எதிர்ப்பு இதினாலெல்லாம் என்ன பிரயோஜனம் வந்து டப்