பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

இரவீந்தரநாத் தாகூர் - எண்ணக் களஞ்சியம்


னத் துன்ப மதுவை உறிஞ்சி விட, மகிழ்ச்சியைப் பிழிந்து விடவில்லை நாங்கள்.

-தோ

மீட்டப்படாத இசையின் பண்ணொலியை நீ கேட்டதில்லையா?-

க.பா

வேனிற் காலத்தில் மலர்கள் பூக்கும் என்பதை, ஐயப்படாமல், என் நெஞ்சத்தின் மாரிக்கால விண்ணின் மேல் தன் புன்முறுவலைச் சிந்துகிறது பருதி ஒளி.

-ப.ப

டக்கத்தின் உறைவிடமாகவிருக்கட்டும் உனது மணிமுடி, உன் ஆன்மாவின் விடுதலையாக இருக்கட்டும் உனது விடுதலை.

-தே

நிறைவை அடைவதற்காக வறண்ட ஆண்டுகளின் பாலைவனப் பகுதிகளை நீ கடந்து செல்கிறாய்.

-ப.ப

ட்டுப்பாடுதான் நல்லவர்களின் நுழைவாயில்.

-எ.எ

றுமையாகிற வெறுமையில் அன்றாடம் இறை-