பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

இரு பெருந்தலைவர்


தது. ஆனால், லட்சுமி நரசிம்முலுவுக்கோ, கல்வித் துறையின் எல்லை காணும் ஆர்வமும் முயற்சியும் இளம்பருவத்திலேயே இயற்கையாகவே அமைந்திருந்தன. தம் தனிச் சிறப்புகளை இழக்கவும் நெஞ்சுறுதியைக் கைவிடவும் ஒரு நாளும் இசையாத உறுதி கொண்டவராய்ப் பிள்ளைப் பருவத்திலேயே விளங்கினார் லட்சுமி நரசிம்முலு. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோலப் பின்னாளில் பேராண்மையாளராய் விளங்குவார் லட்சுமி நரசிம்முலு என்பதற்குரிய பண்புகள் அவர்தம் மாணவப் பருவத்திலேயே காணப்பட்டன. பள்ளிக்கூடங்களில் நடைபெற்ற பட்டி மன்றக் கூட்டங்களிலெல்லாம் கலந்துகொண்டு, உரையாற்றுவதிலும் வாதிடுவதிலும் தனி ஆர்வம் காட்டினர் லட்சுமி நரசிம்முலு, கலை பயிலும் காலத்திலேயே நாட்டின் அரசியல் பிரச்சினைகளில் அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவும், ஆர்வமும் அச்சந்தர்ப்பங்களில் நன்கு புலனாயின.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் லட்சுமி நரசிம்முலு தந்தையாரின் கடையில் வேலைக்கமர்ந்தார். வாணிகத் துறையில் பெற வேண்டிய ஆரம்பப் பயிற்சியெல்லாம் அடைந்த லட்சுமி நரசிம்முலு தந்தையாரின் வாணிபத்தில் பெரும்பங்கு ஏற்றார். தந்தையாரும் மைந்தரும் சேர்ந்து சித்தாலு செட்டி அண்டு கோ என்ற பெயரால் வாணிகம் நடத்தினர். அந்த நிறுவனம் சிறப்பாக லுங்கி வியாபாரம் செய்வதில் கவனம் செலுத்தியது. இத்துறையில் சிறந்த இலாபம் கம்பெனிக்குக் கிடைத்துக்கொண்டிருந்த நாளில் கம்பெனியின் முழுப் பொறுப்பையும் லட்சுமி நரசிம்முலு செட்டியாருக்கே வைத்துவிட்டுச் சித்