பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறப்போர் அண்ணல்

5


தாலு செட்டியார் காலமானார். தங்தையாரை இழந்த மகனார் கம்பெனியின் பெரும்பொறுப்பையும் தாங்க நேர்ந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. இதன் விளைவாக அவர்களுடைய பருத்தி வியாபாரம் பெரிதும் தடைப்பட்டது. எனவே, எகிப்திலும் இந்தியாவிலும் பருத்தி வியாபாரத்திற்குப் பெருத்த வாய்ப்புகள் ஏற்பட்டன. காலம் கொடுத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார் லட்சுமி நரசிம்முலு, குறுகிய காலத்தில் பெருத்த இலாபத்தை அடைந்தார். ஏராளமான செல்ம் திரண்டநேரத்திஇல் லட்சுமி நரசிம்முலுவுக்குப் பணத்திலிருந்த நாட்டம், புளியம் பழமும் ஒடும்போலாயிற்று; விளையும் பயிராய் இருந்த காலத்திலேயே அவரிடம் காணப்பட்ட பொதுநல ஆர்வம், செயலாக உருப்பெறலாயிற்று. இரவு பகலாகத் தம் தாய் நாட்டு மக்களின அரசியல் விடுதலைக்காகவும், மேம்பாட்டிற்காகவும் உழைக்கத் துணிந்தார். அந்நாளில் நம் நாட்டு மக்கள் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்தார்கள். ஆங்கிலக் கல்வியின் ஒளி சிறிதும் பரவாத அக்காலத்தில், நம் முன்னேர்கட்குத் தம்மை ஆள்பவர் யார் என்றும் அறிய இயலாத நிலையில், கண்ணிருந்தும் குருடராய், காதிருத்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையராய் வாழ்ந்திருந்ங்தனர். இந்நிலையில் நாட்டு மக்களின் அவல நிலை கண்டு லட்சுமி நாசிம்முலு கொண்ட ஆத்திரத்திற்கோர் அளவில்லை. துன்ப த்திலும் அறியாமையிலும் மூழ்கிக் கிடந்த அந்நாளைய சென்னை மக்கட்கு, சென்னையிலிருந்த அரங்சாங்கமே முதலும் முடிவும்