பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வானொலி நாடகங்கள் பலவும், நாற்பது படங்களுக்கு இவர் பாடல்களும் எழுதியிருக்கிறார். 'நிலா நானூறு பாடல் தொகுதி இவருக்குப் புகழ் தந்தது. முதன் முதலாக நிலவில் இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ராங் இவருக்கு வாழ்த்து அனுப்பியிருக்கிறார். பல பிரமுகர்களுக்கும் அரசியல் தலை வர்களுக்கும் அறிமுகமான ஆற்றலரசு ஒருவரையும் அணுகித் தன் குறையைத் தெரிவித்தாரில்லை. சிறந்த பாடலாசிரியரும், நாடகாசிரியரும், 30 நூல்களுக்குமேல் எழுதியுள்ள ஜோதிடருமான ஈரோடு ஆற்றலரசு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? - 'திரையுலகில் ஓர் இசையுலகம் நூலையும், நகரத்தில் நாற்பதாண்டுகள் என்ற தலைப்பில் தன் அனுபவங்களையும் எழுதிக் கொண்டிருக்கிறார். இவருக்குச் சேர வேண்டிய புகழ் இன்னும் சேரவில்லை. சென்னையில் 11.9.05 அன்று பாரதியார் சங்கம் நடத்திய மகாகவி பாரதியார் விழாவில் கலைமாமணி விக்கிரமன் அவர்களுக்கு 'பாரதி விருது-2005'ஐ.அருளாளர் திரு.இராம.வீரப்பன் வழங்கி கெளரவித்தார். இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 • e5