பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

205


 அமைந்து உள்ள காரணகாரியங்களை, உடற்கல்வி ஆசிரியர்கள் நன்கு ஆய்ந்து அலசிப்பார்த்து, அதன் பிறகே, மாணவ மாணவியர்க்குக் கற்றுத்தர வேண்டும்.

விளையாட்டுக்களில் ஏற்படுத்தித்தருகின்ற சூழல்களில், விளைகின்ற திறன்களை, வாழ்க்கைச் செழிப்புக்கு உதவும் திறன்களாக அமைகின்ற தன்மைகளால், விளையாட்டுக்களில் பங்கு பெறுபவர்கள். சமுதாய அமைப்பில், சக்தி மிக்கவர்களாக விளங்குவதுடன், மற்றவர்கள் உரிமைகளை மதித்தல், கூட்டுறவாக வாழ்தல், தீமைகளில் ஈடுபடாது ஒதுங்குதல், நல்லவைகளைச் செய்து உதவுதல் போன்ற பண்பாடு மிக்கக் காரியங்களிலும் சிறக்கின்றார்கள். ஆகவே, ஆசிரியர்கள் வாழ்வுக்கு வேண்டிய பண்புகள் கொடுக்கும் விளையாட்டுத் திறமைகளை வளர்த்துவிடவேண்டும் என்பதுதான், பயன் மிகு பரிமாற்றம் என்பதற்குப் பொருத்தமான அர்த்தமாக இருக்கும்.

அத்துடன், புதிய புதிய திறன்களை மாணவர்களுக்குக் கற்றுத்தருகிற பொழுது, அவர்கள் முன்னேற கற்றுக்கொண்டிருக்கும் பழைய திறன்களையும் வளர்த்து விடுவது போல, ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும். அதுவே திறமைகளின் பரிமாற்றமாக வளர்ந்து, நல்ல தேர்ச்சிமிக்க மக்களை நாட்டிலும் வீட்டிலும் உருவாக்கி வளர்க்கின்றன.

பயிற்சிப் பரிமாற்றக் கொள்கைகள் (Theories of Transfer of Training)

பரிமாற்றக் கொள்கைகளின் முக்கிய மூலமாக விளங்குவது மனம் (mind) என்பதாகும். ஆய்வு நிகழ்த்திய