பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

உடற்கல்வி என்றால் என்ன?


பள்ளியில் நலம் பயிற்று விக்கவும், அதிலிருந்து தொடங்கி சமுதாய நலத்தை எல்லாவகையிலும் வளர்த்துக் காக்கவும், உடற்கல்வியானது அதிகமான அறிவை அளித்து ஆனந்தமாக, வாழ உதவுகிறது.

4.நல்ல விளையாட்டாளர்களாக, பார்வையாளர்களாக:

உடற்கல்வியானது பொதுமக்களுக்கு விளையாட்டுக்களில் பங்கு பெறச் செய்யும் வாய்ப்புக்களை வழங்குவதுடன், அவர்களுக்குள்ளே மறைந்து கிடக்கும் திறமைகளையும் சக்தியையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது.

அத்துடன் நில்லாது, விளையாட்டைப்பற்றிய விளக்கமான அறிவினை அளிப்பதுடன், அவர்களை நல்ல பார்வையாளர்களாகவும் மாற்றி அமைத்துப் பார்த்து மகிழவும் வைக்கிறது.

5. ஓய்வு நேரமும் மன அமைதியும்:

நன்கு படித்தவர்கள் தங்கள் ஒய்வு நேரத்தை ஒழுங்காகப் போக்கிப் பயன்பெற்றுக் கொள்கின்றார்கள். உடற்கல்வியானது மக்களுக்கு நிறைய பொழுதுபோக்கும் காரியங்களைப் படைத்துத் தருகின்றன. தேவையானவர்களுக்கு வேண்டிய காரியங்களைப் பெற வழி வகுத்தும் தருகின்றன.

அதனால் ஒய்வு நேரத்தில் உல்லாசம் பெறவும், அதன் மூலம் அருமையான மனஅமைதி பெறவும் அவர்களுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன.

6. அழகை ரசித்தல்:

உலகமே அழகு மயம். அறிவுள்ளவர்கள் இயற்கையின் அழகை ரசிக்கிறார்கள். வியக்கிறார்கள்.மகிழ்கிறார்