பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

59


கள், இந்த அற்புதமான அறிவை வளர்க்கும வாய்ப்புக்களை யெல்லாம் உடற்கல்வி கற்பிக்கிறது.

உடலையே அழகாக வைத்துக் காக்கின்ற உபாயத்தை அளிக்கிற உடற்கல்வி, உலகை அனுபவிக்கும் உண்மையான ஞானத்தையும் வளர்த்து உறுதுணையாக இருக்கிறது.

7. இலட்சிய வாழ்வை நோக்கி

ஒரு கப்பலின் மாலுமி, தனது கப்பலையும் தன்னை நம்பியிருக்கும் பயணிகளையும் குறிப்பிட்ட இடம் நோக்கி, சரியான திசையில் பாதுகாப்புடன் கொண்டு போவது போன்ற பணியை உடற்கல்வி ஆற்றுகிறது.

சிறந்த திட்டங்களை வடிவமைத்துத் தந்து சரியான வழிகளைக் கற்பித்து, அறிவுள்ளவர்களாக நடந்து பயனுள்ள ஆனந்த வாழ்வு என்னும் இலக்கினை அடைய உடற்கல்வி உதவுகிறது. அதாவது, தனிப்பட்ட ஒரு மனிதரை, தன்னை அறிந்து கொள்ளச் செய்து, தகுதி யுடையவராக்கி, சிறந்த வாழ்வு வாழும் செம்மையான குணங்களை வளர்த்து விடுகிறது.

II. கூடி வாழும் குணம் வளர்க்கிறது (Human Relationship)

ஒருவருக்கொருவர் உறவாடி உள்ளம் மகிழ்வது என்பது மனிதர்களுக்குரிய மகிமையான குணமாகும்.நன்கு படித்தவர்கள், நடமாடும் அன்பு உருவங்களாக விளங்கி, நட்பும் நல்ல உறவும் கொண்டு பழகி, பெருமை சேர்க்கின்றார்கள். அதற்கு, உடற்கல்வி உதவும் முறைகளைக் காண்போம்.