பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

இடைவெளி கொடுத்து, எண்ணிக்கை முறையில் கற்பிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு பஸ்கி செய்யும் எண்ணிக்கை முறையைக் காண்போம்.

அனுமார் பஸ்கி.

1. நேராக, நிமிர்ந்து விறைப்பாக நிற்றல் (12" இடைவெளி)

2. முழங்கால்களை பாதி அளவு மடக்கி, அரைக் குந்தலாக (Squat) நிற்றல்.

3. இந்த நிலையிலிருந்து அதே இடத்தில், துள்ளிக் குதித்து இடது கால் ஒரடி முன்னேயும், வலது கால் ஓரடி பின்னேயும் வைத்து; இடது கையை நெற்றிக்கு முன்னும், வலது கையை முதுகிற்குப் பின்னும் வைத்தல்.

4. முதல் நிலைக்கு வரவும்.

மேலும் பல பயிற்சிகளைத் தெரிந்து கொள்ள, நான் எழுதிய 'இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்’ எனும் புத்தகத்தைப் பார்க்கவும்.

மல்லர் கம்பம் (Malcomb)

மல்யுத்தம் செய்பவர்கள், ஒரு கம்பத்தை , எதிரியாக பாவித்து, பல பிடி முறைகள் போட்டு, மல்யுத்தம் பழகுதல் இதற்கு உதவும் கம்பத்திற்குப் பெயர் மல்லர் கம்பம்.

சில முக்கியக் குறிப்புக்கள்

1. மல்லர் கம்பம் நிழல்மிகுந்த இடத்தில் பதிக்கப்பட வேண்டும்.