பக்கம்:உத்தரகாண்டம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106   ✲   உத்தரகாண்டம்


“என்னப்பா, மோகன்தாசு, நீ கல்யாணத்துக்குத்தானே கூப்பிட வந்திருக்கே, எப்ப கல்யாணம்?”

பெண்ணின் தந்தையாகத் தெரிந்த ஒருகடுக்கன்காரர், அவளைத் திருப்பிப் பார்த்து “வணக்கம்மா... பொன்னம்பலம், எம்பேரு. உங்க மகன், எழுதிய பிள்ளை நிலாம் படம் நாத்தான் எடுத்தேன். இங்கேயே ஜி.டி. ரோட்ல, வெற்றில ஓடுத. முதல் படமே பேரும் புகழும் சம்பாதிச்சிக் குடுத்திருக்கு. அண்ணா தலைமையில் பாராட்டு விழா வச்சிருக்கிறோம். இப்ப அய்யாகிட்ட ஒரு குடும்ப பாஸ் குடுத்திட்டுப் போறேன். அவசியம் வந்து பாக்கணும்...” அவள் குழம்பிப் போனாள். கல்யாணப் பத்திரிகையா, சினிமா பாஸா, அய்யாவைப் பாக்க வந்தது, தேர்தல் விசயமா?

“அய்யா அவசியம் வந்து பார்க்கணும்... தேர்தல் வருது. அது முடிஞ்சதும் தை பிறந்து கலியாணம்னு நினைச்சிட்டிருக்கிறோம். பெரியம்மா, இதான் பொண்ணு ஃபோட்டோ...”

பெரிய தோல்பையைத் திறந்து பெண்ணின் புகைப்படத்தை எடுத்து அவர் அய்யாவிடம் கொடுத்தார். அய்யா, அம்மாவிடம் கொடுக்க, “பொண்ணு, லட்சணமா இருக்கா. இந்தா, பாரு தாயம்மா...” என்று கொடுத்தாள்.

“இதில நான் சொல்ல என்னம்மா இருக்கு? நீங்க சொன்னா சரி...”

“பொண்ணுக்கு என்ன வயசு?...”

“இந்த மாசி வந்தா பதினெட்டு முடியிது... அதெல்லாம் சிக்கல் இல்ல. ஊரில பொம்புளப்புள்ளங்க ஸ்கூல் எட்டு முடியத்தானிருக்கு. அத முடிச்சிட்டா. நல்லா சமைப்பா, மனுசங்க குணம் அறிஞ்சு நடப்பா. நான் சொல்ல வேணாம் நீங்களே தெரிஞ்சிப்பீங்க...” என்றார் அவளைப் பார்த்து.

அம்மா அதற்குள் சமையலறைக்குள் காபி தயாரிக்கச் சென்றாள். அவள் உடனே அம்மாவை விடுவிக்கச் சமையலறைக்குச் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/108&oldid=1049633" இலிருந்து மீள்விக்கப்பட்டது