பக்கம்:உத்தரகாண்டம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    169

அன்று திசை தெரியாப் பிரமையில் நின்றாற்போல் உணர்ந்தாள்.

நம்மை ஆள வந்த பரங்கியன், இந்த சனங்களைப் புழுவாகப் போட்டுமிதிக்கும் வகையில் அதிரடியாகச் செய்ய முடியவில்லை. ஏனெனில் படிக்காத கிராம வாசியிடமும், ஏழையிடமும், ஒழுக்க கலாசாரம், அதனால் பற்றிய நேர்மை, பிடிவாதம் எல்லாம் இருந்தன. அந்த ஆதாரத்தில்தான் காந்திஜி, இந்த நாட்டு மக்களுக்கு உகந்தது அஹிம்சை வழின்னு செயல்பட்டார். இதெல்லாம், அடியோடு வேரறுக்க படுது இன்னைக்கு. தூலமா இருக்கிற தீவிரவாதம்கூட ஒத்துக்கலாம். ஓர் அரசியல் கட்சி, சினிமான்னு ஒரு நவீனக் கருவியை மக்களை மயங்கவைக்கும் தந்திரங்களில் கவர்ந்து...

“விநாயக மாமா, நீங்க வரவர எல்லாமே பிரசங்கம் கட்டுரைன்னு ஆரம்பிச்சுடுறீங்க. இதுக்கெல்லாம் யாரும் வரமாட்டா. வேற எதானும் யோசனை பண்ணுங்க...

அவர் தலையைத் தடவிக் கொண்டு போனார்.

அப்போதுதான் அம்மா கேட்டார்.

“தாயம்மா ? அப்ப நீதான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தனியா?”

“எனக்கு வேற வழி தெரியலம்மா? அப்பன் தெரியாத புள்ளன்னு வச்சிட்டு அவ சங்கடப்படுவாளே?”

“‘இருதாரத் தடைச்சட்டம்’ன்னாலும், இவங்க தப்பிச்சிடுவாங்க! ஏன்னா, இவங்கதானே எதையும் ஒப்புக் கொள்ளும் வோட்டு மந்தைய உருவாக்கி இருக்காங்க?”

“அதுவும் சரிதான்” என்றாள் அம்மா.

17


ப்போது, மின்னல் கீறுகள் மண்டையைக் கூறு போடுகின்றன. தப்பு வழியில் வளரும் சந்ததி, தப்பு வழியிலேயே பூவும் பிஞ்சும் உதிர்க்குமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/171&oldid=1050020" இலிருந்து மீள்விக்கப்பட்டது