பக்கம்:உத்தரகாண்டம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206   ✲   உத்தரகாண்டம்


“நா. தாயம்மா... குருகுலம்... எஸ்.கே.ஆர். தியாகி...”

“அம்மா...! நான் சுப்பய்யா, தெரியல...?”

ஏதோ பிடிகிடைத்தாற்போல் மனம் சிலிர்க்கிறது.

பேசவில்லை. தீபாராதனைக்குப் போகிறார்கள்.

இவன் அம்மா அஞ்சலை. அப்பா கிடையாது. சேவா கிராமம் போய் பராங்குசம் வந்து ஆசிரியப் பொறுப்பேற்ற போது இவனும் வந்தான். ராதாம்மாவுக்கு இந்தி பேசப் பயிற்சி கொடுத்திருக்கிறான். நல்ல கறுப்பு; இப்போது, உடல் வெளுத்து சோகை பாய்ந்தாற்போல் இருக்கிறான்.

திடுமென்று ஒருநாள், குடிலைவிட்டுப் போய்விட்டான். அம்மா அஞ்சலை குருகுலத்தில்தான் பின்னர் வேலை செய்தாள்.

பேச்சே எழவில்லை. வெகுநாட்கள் சென்றபின் அறிமுகமானவர்களைப் பார்த்த மகிழ்ச்சி பிரதிபலிக்கவில்லை.

தனியாகத்தான் வந்திருக்கிறானா? எங்கிருந்து எங்கு வந்து முளைத்திருக்கிறான்? பிரதான தேவிக்குப் பின் சுற்றிலும் வந்து தீபாராதனை முடிகிறது. கர்ப்பூரத்தட்டை அங்கேயே நடுவில் பீடமொன்றில் வைத்து விடுகிறார் பூசாரி.

பக்தர்களுக்கு அந்தப் பூசாரி இளைஞரே, பூக்களும் தீர்த்தப் பிரசாதமும் தருகிறார்.

குங்குமப்பூ, கர்ப்பூர மணமும் கரைந்த தீர்த்தம் நாவுக்குப் புனிதம் கூட்டுகிறது. புலன்கள் ஒடுங்கிவிட்டால் எந்தச் சுவையும் கவர்ச்சி கொடுக்காது அய்யா. ராதாம்மாவின் மறைவுக்குப் பிறகு, வழக்கமாக, கீதைபடித்துச் சொல்வார். அம்மாவுடன் அவளும் கேட்பாள்.

யோகத்தில் ஒடுங்கியவர் அம்மா. ஒரு குழந்தை வேண்டுமென்று, காந்திஜியைத் தனியாகச் சந்தித்து, புருசனின் பிரும்மசரிய விரதத்தை மாற்றிக் கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/208&oldid=1050141" இலிருந்து மீள்விக்கப்பட்டது