பக்கம்:உத்தரகாண்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    29


இப்படிச் சொல்லிவிட்டு அவர் யோசனையில் ஆழ்ந்து விட்டார். தாயம்மாள் கண்களைக் கட்டிக் கொண்டு எங்கோ நிற்பது போல உணர்ந்தாள்.

‘மோகன்தாசு’ என்று வைத்த புள்ளி உயிர் பெற்றதும் தன்னையே அழித்துக் கொண்டது. இந்த ‘இளவழுதி’க்கு சுயம் என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால் மேலும் மேலும் தப்புகள் செய்திருப்பானா?

வேட்டி விசிறலும் நடை அரவமும் அவளைச் சுய உணர்வுக்குக் கொண்டு வருகின்றன. ரங்கன் பின்புறத்திலிருந்து ஓடி வருகிறான்.

“வாங்க, வாங்க சார்...!”

யாரிவன்? வாட்டசாட்டமாக, வெள்ளை முழுக்கைச் சட்டை, கரை வேட்டி, மேல் வேட்டி, தங்கச்சங்கிலி மோதிரங்கள், நெற்றியில் ஒற்றை நாமம், கிருதா, மீசை.

“அம்மா, வணக்கம்!” என்று குனிந்து அவள் எதிர்பாரா விதமாகக் கால்களைத் தொட்டுக் கும்பிடுகிறான்; ஏதோ ஒரு சென்ட்வாசனை அழையா விருந்தாளியாக மூக்குக்குள் இவன் புகுந்தது போல் நுழைகிறது. “புரவலர் அண்ணாச்சியப் பாக்க வந்தேன். வந்திருக்கிறதா ரங்கன் சொன்னான். சாப்பாடு அனுப்பினேன். வரேன்னு சொல்லி அனுப்பினேன்... அம்மா நலமாயிருக்கிறீங்களா?”

கார் டிரைவர் போலிருக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு, மலை வாழை பிளாஸ்டிக் பைளைச் சுமந்து வருகிறான். அவளிடம் அவற்றைக் கொடுக்க, அவள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

“அம்மாவைப் பார்க்க வரணும்னு அடிக்கடி என்ன, தினமும் நினைக்கிறதுதான். வேலை நெருக்கடி, முடியல. எங்கம்மா இருந்த நாள்ள, தியாகி அய்யாவைப் பத்தி ஒரு நாக்கூடப் பேசாம இருந்ததில்ல. அவங்க போனப்ப கூட நீங்க வந்திருந்தீங்க. கஷ்டப்பட்டு எங்களை முன்னுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/31&oldid=1049417" இலிருந்து மீள்விக்கப்பட்டது