பக்கம்:உத்தரகாண்டம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    331

போக தண்ணில போட்டு வெளயாடி எல்லாம் பிரிச்சிட்டேன். கண்ணாடித்துண்டெல்லாம் கொட்டிப் போச்சு, உங்ககிட்ட ஒட்டித்தா ஒட்டித்தான்னு அழுதேன்...?”

அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

அவன் அதே சம்பவத்தை இந்தியில் சொல்கிறான். புரியாதவர்கள் இப்போது சிரிக்கிறார்கள்.

ஆனால் தாத்தா இந்தக் கலகலப்பில் கலந்து கொள்ளவில்லை.

“நம்ம கலாசாரம், அஹிம்சை, எளிமை, ஒழுக்கம் எல்லாம் இப்படித்தான் பிடிப்பு விட்ட கண்ணாடித் துண்டுகளாயிட்டன. ஆனா இளைய வாரிசுகள் அன்னிக்கு வெள்ளைக்காரனை எதிர்த்து, எல்லாரும் ஒரே இலட்சியத்தில் கூடினாப்பில வந்திருக்கிறீங்க. அதுதான் ஆறுதல்...” என்று ஆழ்ந்த குரலில் பேசுகிறார்.

“அன்றைய மாதிரி இல்லை” என்று காலித் சொல்லும் போது, செங்கமலம் ஆமோதிக்கிறாள்.

“நம் வரலாற்று ஆராய்ச்சி அண்ணன் சொல்வது சரி. சுதந்தரப் போராட்டத்தில் வெள்ளையனை வீழ்த்தனும் என்ற குறிதான் பொது. முதல்ல, அது துப்பாக்கி கலாசாரத்தில் தான் வெளிப்பட்டது. ஹிட்லர், ஜப்பான்னு, நேதாஜியின் ஐ.என்.ஏ. வரை போச்சு. காந்தியின் அஹிம்சையின் இலக்கு பிரிட்டிஷ்காரனை மட்டும் அப்புறப்படுத்தியது... இது அப்படியில்லை.

“சரியாச் சொல்லணும்னா பெரும்பான்மையான பேருக்கு அப்பவும் சுதந்தரத்தப் பத்தி எந்தத் தெளிவும் திட்டவட்டமான கருத்தும் இல்லன்னு தோணுது. அப்படி இருந்தால், இப்பவும், சுதந்தரம்னா என்ன, மனிதருடைய அடிப்படை உரிமைகள் என்னன்னெல்லாம் எதுவுமே தெரியாத அதே பெரும்பான்மையை வச்சி குடியாட்சிங்கற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/333&oldid=1050475" இலிருந்து மீள்விக்கப்பட்டது