பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69 ————————||||

உப்புமண்டித் தெரு

நாத்திக ஜன்னியிலே

தனது

'தத்துவங்கள் உதிர்ப்பவன்!

பேனாவும்

பேப்பருமாக

பிரேதப் பொம்மையாக

இயங்கிக் கொண்டிருப்பவன்!

அக்கவிஞன்

ஆன்மிக ஞானியை

இன்னும்

சமீபத்து நின்றான்!


கூட்டம் இளைத்தது!

கூடக் குறைய

நூறு பேறாக ஆயிற்று!


மீண்டும் அமைதியுடன்

மெய்ஞான வித்தகர்,

"அன்புக்கூர்ந்து கேளுங்கள்!

நான் ஒண்டிக்கட்டை!

கைச் சமையல்காரன்!

என் அடுப்பங்கரை

மிகமிகச் சிறியது!

நூறு பேர்களும்

அதில்

நுழையக் கூட முடியாது!

அதனால்...”