பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



புகழ்ப்பொலிவேடு!

5


பிள்ளையவர்களிடமும் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகப் பாடங்கேட்டுச் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் பட்டம் பெற்றவர். அவர் சிறந்த பேச்சாளர்: எழுத்தாளர். ஒரு நாள் காலையிற் புறப்பட்டு போளூரை அடைந்து ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் இல்லத்துக்குச் சென்றேன். புலவரவர்கள் வெளியூர்க்குச் சென்றிருந்தமையால் கடிதம் எழுதி வீட்டம்மையாரிடங் கொடுத்துவிட்டு சென்னைக்குத் திரும்பினேன். எனது கடிதத்தைப் பார்த்தபின் என்னோடு பேசுவதற்குப் புலவரவர்கள் சென்னைக்கு வந்தனர். அப்போது ஐம்பெருங் காப்பியம், ஐஞ்சிறு காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, பெருங்கதை ஆகிய ஐந்து நூல்கட்கும் சுருக்கப் பதிப்புகளைக் கழகவழி வெளியிட வேண்டுமென்று விரும்பினேன். புலவரவர்களும் எனது விருப்பத்தை மகிழ்வோடு ஏற்று, முதற்கண் சீவக சிந்தாமணிச் சுருக்கம் எழுதியனுப்புவதாகக் கூறினர். அங்ங்னமே அவர்கள் எழுதியனுப்பிய சீவகசிந்தாமணிச் சுருக்கப் பதிப்பில் முழுநூலில் ஏறக்குறைய காற்பங்குச் செய்யுள்கள் இடம் பெற்றுள்ளன. கதைப் போக்குக் கெடாமல் இனிய செய்யுள்களைத் திரட்டிக் கோத்து, இடையிடையே விடுக்கப்பட்ட செய்யுள்களின் தொடர்பைச் சுருக்கமாக ஆங்காங்கே எளிய உரை நடையில் எழுதிச் சேர்த்து, ஒவ்வொரு பக்கத்திலும் அடியில் தெளிவான உரைக்குறிப்புகளும் வரைந்து விளக்கமான ஒர் ஆராய்ச்சி முன்னுரையோடு இந்நூல் பதிக்கப் பெற்றுள்ளது. செய்யுள்கள் சீர்பிரித்தும் கடின சந்தி பிரித்தும் உரிய தலைப்புகளுடன் அமைக்கப் பெற்றுள்ளன. நச்சினார்க்கினியருரையோடு சீவக சிந்தாமணியைப் பயில்வார்க்கு இச்சுருக்க நூலும் உரையும் நன்கு பயன்படுவனவாயிற்று. இது 1941 திசம்பரில், 376 பக்கங் கொண்டதாய் வெளியிடப் பெற்றது. சங்க இலக்கியங்கள் பலவற்றை ஏட்டுச் சுவடிகளினின்றும் பெயர்த்து வெளியிட்டுப் பெரும்புகழெய்திய முதுபெரும் புலவர் டாக்டர் சாமிநாதையர் அவர்கள் முதன் முதல் வெளியிட்ட நூல் 'சீவக சிந்தாமணி' 'நச்சினார்க்கினியர் உரை'யேயாகும். அதேபோல் கழகம் முதன் முதல் வெளியிடுமாறு திருவருள் கூட்டியதும் சீவக சிந்தாமணிச் சுருக்க நூலேயாகும். அவரை உங்கள் கழக நூற்றாண்டுக்கு நன்கு பயன்படுத்தலாமே என்று கூறினார். அதனைக் கேட்டு யான் பெரு