பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

நமது வீடுகளிலே மின்சார விளக்குகள் எரியக் காண்கிறோம். அவை எரிவதற்குக் காரணமா யிருப்பது எது? 'எலக்ட்ரிக் கரண்ட் '.

எலக்ட்ரிக் கரண்ட் என்றால் என்ன பொருள்? மின்சாரத்தின் ஓட்டம் என்று பொருள். மின்சாரம் ஓடுவானேன்?

மின்சக்தியிலே இரண்டு விதம். ஒன்று எலக்ட்ரான். இன்னொன்று புரொதான். மின் சக்தி அதிகமாக உள்ளது எலக்ட்ரான். குறைவாக உள்ளது புரொதான்.

இந்த எலக்ட்ரானும் புரொதானும் காதலர் மாதிரி. எலக்ட்ரான் காதலி. புரொதான் காதலன்.

இன்றைய சினிமாவிலே காதல் காட்சி வந்தால் என்ன காண்கிறோம்? காதலனும் காதலியும் ஒருவரை மற்றொருவர் துரத்திக் கொண்டு ஓடக் காண்கிறோம் அல்லவா? அந்த மாதிரி எலக்ட்ரான் என்கிற காதலி, புரொதான் என்கிற காதலன் பின்னே ஓடிக் கொண்டே இருப்பாள்.

மின் சக்தி அதிகம் உள்ள ஒரு பொருளையும், குறைவாக உள்ள வேறு ஒரு பொருளையும் இணைத்தால் என்ன ஆகும்?