பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

அடுக்கு, அடியில் இருக்கும். அதை விடக் கொஞ்சம் புதியது அதன் மேலே இருக்கும். இப்படியாக மேலே போகப் போகப் புதியதும் அடியில் போகப் போகப் பழையதும் இருக்கும். எனவே, மிகப் புராதனமான யுகம் அடியில் தொடங்கப்படுகிறது. ஐந்தாவது யுகம் மேலே இருக்கிறது.

இந்த ஐந்து யுகங்களும் உயிர் இன வரலாற்றினை நமக்குத் தெரிவிக்கின்றன. இதனால் தான் உயிர் இனங்களின் வரலாறு ஐந்து பாகங்கள் கொண்டது என்று முன்னே சொன்னோம்.

ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு யுகம் பற்றிச் சொல்லும். முதல் இரண்டு பாகங்கள் தெளிவாக இல்லை. முதல் இரண்டு யுகங்களில் உயிர் இனங்கள் இருந்தன. ஆனால் அவை பற்றிய விபரங்கள் தெளிவாக இல்லை. பாக்கியுள்ள மூன்று யுகங்களின் வரலாறு தெளிவாக உள்ளது. இந்த மூன்று யுகங்களே பதினாறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தெளிவாக உள்ள மூன்று பாகங்களும் ஐம்பது கோடி வருஷ வரலாற்றினை நமக்கு அறிவிக்கின்றன. தெளிவாக இல்லாத