பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
போரும் புரட்சியும்

கண்ணாக் கெட்டாத் தொலைவிலிருந்த யுத்தமேகம் நமது மண்ணை நெருங்கியது. ஜப்பானின் தாக்குதலும், விலைவாசி ஏற்றறமும் மதுரை நகர மக்களிடையே பெருங் குழப்பத்தை உண்டாக்கின. “கொழும்பில் குண்டு! கொச்சியில் ஜப்பான் படை! சென்னை காலி செய்யப்பட்டது! பாம்பன் பாலம்போயிற்று! கரை யோரம் எரிகிறது.” இவைகள்தாம் காலையில் கண் விழித்ததும் பரதேசித் தபாலில் வரும் பயங்கரச் செய்திகள்! அரிசிவிலை பவுன் விலையாக உயர்ந்தது. அன்றாடக் கூலிகளின் அடிவயிற்றில் தீப் பிடித்தது. வயிற்றுப்பிரச்னை வந்துவிட்டால் அதன் விளைவு என்ன வாகும்? பசி வந்தால் பத்தும் என்ன; எல்லாம் பறந்து போவது இயல்புதானே!

கொள்ளையும் கல்லெறியும்

கொள்ளை! கொள்ளை!! அரிசிக்கடை, மளிகைக்கடை,ஜவுளி கடை எங்கும் கொள்ளே !!! நள்ளிரவிலல்ல; பட்டப் பகலில், வெட்ட வெளியில், உணவு உடை இரு பகுதியிலும் பெருங் கொள்ளை. சந்தடிச் சாக்கில், சொந்த விருப்பு வெறுப்பில் வந்த தைச் சுருட்ட வந்தவர் சிலர். புரட்சியைப்பற்றி அறிந்திருக் கிறோம் புத்தகங்களில். அதன் அமைப்பில்-உருவத்தில் ஒரு பகுதியை அன்று கண்முன்னே கண்டோம் மதுரையில், ‘பல்பு’கள் உடையாத சினிமாக் கொட்டகைகளே இல்லை. அலங்கார விளக்குகள் அலங்கோலமாயின. தெருவெல்லாம் கண்ணாடிச் சிதறல்கள்!

எங்கள் நாடகக்கொட்டகையை ஒட்டிய விறகுக் கடையில் புரட்சி வீரர்கள் புகுந்தனார். ஒரு கட்டை விடாமல் காலி செய் யப்பட்டது. அடுத்த பாய்ச்சல் நாடகக் கொட்டகை பல்பு