பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 43 அருமைத் திருநாட்ே! இந்தக் கொடுமையை அனுமதித்தால் நீ குற்றவாளி அல்ல என்று உன்னல் சொல்ல முடியுமா? அல்லது இதில் உனக்குப் பொருப் பில்லை, என்ருவது சொல்லி நீ தப்பித்துக் கொள்ள முடி யுமா? நான் இதை உன் மணி வயிற்றில் பிறந்த எல் லோருக்குமே தெரிவிக்கின்றேன். வயோதிகர் முதல் வாலிபர் வரை, சிறையில் வதியும் குற்றவாளிகள் முதல் சிதையில் வேகப்போகும் நிரபராதிகள் வரை. செல்வத் தில் புரளும் சீமான்கள் முதல் சாக்கடையில் புரளும் ஏழைகள் வரை, படித்தவர் முதல் படிக்காதவர் வரை எல்லார்க்கும் சொல்லுகின்றேன். கொடிய எஸ்ட ரெஸியை விசாரணை மண்டபத்துக்கழைத்து வேடிக்கை நடத்தி வெளியே அனுப்பி விட்டார்கள். உன்னிட மாவது நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். நீதி மிக வலிமை வாய்ந்தது. ஆல்ை அது ஒடுக்கப்பட்டிருக் கிறது. தடைப்படுத்தப் பட்டிருக்கிறது. அந்த நீதியை துண்டு துண்டாக வெட்டி மண்ணுக்கடியில் பலவிடங் களில் பல துண்டுகளாகப் புதைத்து விட்டாலும் என்ரு வது ஓர் நாள் அந்தத் துண்டுகளெல்லாம் பூமிக்கடியி லேயே ஒன்ருகச் சேர்ந்து பூமி வெடித்து வெளிக்கிளம்பு கிறபோது, அதல்ை ஏற்படுகிற அதிர்ச்சியால் இந்த அயோக்கியர்கள் அனைவரும் மாண்டுவிடுவார்கள். அந்த அதிர்ச்சி, உண்மை விரும்பிகளின் இதயக்கதவுகளைக் கண்டிப்பாகத் திறந்து விட்டு விடும். உன்னேயும் எழுப்பி விட்டுவிடும். , - . . . . தனிப்பெருந் தாயகமே ! நீ இதில் முட்டாளாகக் கூடாது. விழித்தெழு. இனி நீ நின்று கொண்டே தூங் கும்.பழக்கத்தைத் தயவு செய்து விட்டுவிடு. உன் மகன், ஜோலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/44&oldid=759933" இலிருந்து மீள்விக்கப்பட்டது